இனி சலுகை கிடையாது... பொருளாதாரம் தன் போக்கில் சீரடையும்! - ஒபாமா அறிவிப்பு

பொருளாதார மந்தத்தில் சிக்கித் தவிக்கும் அமெரிக்கா, தொழில் துறை மற்றும் நிதித் துறை நிறுவனங்களைக் கரையேற்ற முன்பு 787 பில்லியன் டாலர் கடனுதவித் திட்டத்தை அறிவித்தது. ஆனால் இந்த நிதி உதவியை அறிவித்த பிறகு ஒபாமா எதிர்பார்த்த பொருளாதார மீட்சி பெருமளவு நடக்கவில்லை. மாறாக வேலையின்மை மேலும் அதிகரித்துள்ளது.
இந்த ஆண்டே அமெரிக்கப் பொருளாதாரம் 'நிமிர்ந்து விடும்' என எதிர்பார்த்தது ஒபாமா நிர்வாகம். ஆனால் அடுத்த ஆண்டும் தேக்க நிலை தொடரும் என்று அமெரிக்க மத்திய வங்கியும், பொருளாதார அறிஞர்களும் அறிவித்துள்ளது இன்னொரு அதிர்ச்சி.
இந்த நிலையில் பொருளாதார மீட்சியை துரிதப்படுத்த மேலும் பல பில்லியன் டாலர்களுக்கு ஒபாமா நிர்வாகம் நிதிச் சலுகை மற்றும் கடன் உதவிகளை வழங்கவிருப்பதாக செய்திகள் வெளியாகின. ஆனால் இவற்றை திட்டவட்டமாக மறுத்துள்ளார் அதிபர் பாரக் ஒபாமா.
ரேடியோ மற்றும் இணையதளங்களுக்கு நேற்று அளித்த சிறப்புப் பேட்டியில் ஒபாமா கூறியிருப்பதாவது:
"இனி நிதி உதவி எதையும் செய்யும் திட்டமில்லை. வேலையின்மை பிரச்சினை சீராக இன்னும் சில காலமாகும் என்று தெரிகிறது. இனி பொருளாதாரம் தன் பாதையிலேயே சென்று தக்க தருணத்தில் சீராகும்.
இதுபோன்ற பொருளாதார மந்த சூழலில், பொருளாதாரத்தை அதன் இயல்பிலேயே விட்டுவிடுவதுதான் சிறந்தது. நாமாக எடுக்கும் நடவடிக்கைகளில் எந்த மாற்றமும் வந்துவிடாது...", என்றார் ஒபாமா.
-
நியூயார்க் மயானத்தில் பூமிக்கு அடியில் 56 லட்சம் தேனீக்கள்! உலக அதிசயமாக மாறிய கல்லறைத் தோட்டம் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்?












Click it and Unblock the Notifications