போலி அடையாள அட்டை-நிலேகனி எச்சரிக்கை
பெங்களூர்: நாட்டு மக்கள் அனைவருக்கும் பொதுவான அடையாள அட்டை உருவாக்குவதன் மூலம் பெரிய திட்டங்களை சிறப்பாக, அனைவருக்கும் பலனளிக்கும் வகையில் செயல்படுத்த முடியும் என்றார் நந்தன் நிலேகனி. அதே நேரம் போலி அடையாள அட்டைகள் தயாரிக்க முடியாத அளவுக்கு மிகுந்த எச்சரிக்கையுடன் இந்த அட்டைகள் தயாரிக்கப்பட வேண்டும் என்றார் அவர்.
அனைவருக்கும் தேசிய அடையாள அட்டை உருவாக்கும் திட்டத்தைச் செயல்படுத்தவிருக்கும் நந்தன் நிலேகனி, இன்று பெங்களூரில் முதல்வர் எடியூரப்பாவைச் சந்தித்தார்.
பின்னர் நிருபர்களிடம் அவர் பேசுகையில், "இந்தத் திட்டத்துக்காக முழுமையான ஒரு டேட்டா பேஸை தயாரிக்க வேண்டியுள்ளது. நாட்டு மக்களின் முழு விவரமும் இந்த தொகுப்புக்குள் அடங்கிவிடும். இந்த விவரங்கள் இருந்தால் போதும்... எந்தத் திட்டமாக இருந்தாலும் மக்கள் அனைவருக்கும் முழுமையாகப் பலனளிக்கும் வகையில் செயல்படுத்த முடியும்.
இன்று பொதுவான அடையாள அட்டை உருவாக்குவதில் உள்ள சவால், போலிகள் பெருகாமல் பார்த்துக் கொள்வதுதான். விரல் ரேகை போன்ற சில நுணுக்கமான விஷயங்களை உள்ளடக்கியதாக இந்த அடையாள அட்டை தயாரிக்கப்படும், என்றார்.
எத்தனை காலத்துக்குள் இது செய்து முடிக்கப்படும் என்ற கேள்விக்கு, முதலில் நான் எனக்கான அலுவலகத்தைத் தேட வேண்டும். பின்னர் இருக்கிற நிலைமை, கிடைக்கிற விவரங்களை வைத்துதான் மற்றவை குறித்து பேச முடியும், என்றார் நிலேகனி.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ!












Click it and Unblock the Notifications