நிறைந்தது கபினி..காவிரியில் வேறு வழியின்றி நீரை திறந்த கர்நாடகம்

கபினி அணை தனது முழுக் கொள்ளவை எட்டிவிட்டதையடுத்து வேறு வழியில்லாமல் நீரைத் திறந்துவிட்டுள்ளது கர்நாடகம். நேற்று வினாடிக்கு சுமார் 16,000 கன அடி நீர் திறந்துவிடப்பட்டதால் இந்த நீர் ஒகேனக்கல் அருகே உள்ள பிலிகுண்டு பகுதியை நேற்று காலை தொட்டது.
இதையடுத்து இன்று பிற்பகலில் நீர் மேட்டூர் அணையை எட்டியது. அணைக்கு வினாடிக்கு 13,688 கன அடி நீர் வந்து கொண்டுள்ளது.
இந்த நீர் வரத்து காரணமாக தஞ்சை, திருவாரூர், நாகை, கடலூர் உள்ளிட்ட பகுதிகளின் குறுவை சாகுபடிக்கு நீர் திறந்துவிடப்படும் வாய்ப்பு அதிகரித்துள்ளது.
அதே போல மைசூர் கிருஷ்ணராஜ சாகர் அணைக்கும் நீர் வரத்து அதிகரித்துள்ளது. இதனால் அங்கிருந்தும் நீர் திறந்துவிடப்படும் வாய்ப்பு அதிகமாகியுள்ளது.
இப்போது மேட்டூர் அணையில் 60 அடி நீர் உள்ளது. இதன் மொத்தக் கொள்ளவு 120 அடியாகும். கடந்த மாதத்தில் மேட்டூருக்கு கர்நாடகம் 10.16 டிஎம்சி அடி நீரை தந்திருக்க வேண்டும். ஆனால், 6 டிஎம்சி அடி தான் நீரை வழங்கியது.
இப்போது தனது அணை நிரம்பிவிட்டதால் அதன் பாதுகாப்பு கருதி உபரி நீரை திறந்துவிட்டுள்ளது.
இந் நிலையில் கபினிக்கு நீர் வரத்து குறைய ஆரம்பித்துள்ளதால் உடனடியாக நீர் திறப்பு அளவையும் கர்நாடகம் குறைத்துவிட்டது. கடைசியாக கிடைத்த தகவல்களின்படி கபினியிலிருந்து இப்போது வினாடிக்கு 13,500 கன அடி நீரே திறந்துவிடப்படுகிறது.
-
Annamalai: பாஜக தலைவர்களுக்கு சுமையாக இருக்க விரும்பவில்லை! அண்ணாமலை உருக்கம்! -
திமுகவை சீண்டும் துரை வைகோ.. இன்னைக்கு என்ன சொல்லி இருக்காருன்னு பாருங்க! புது பஞ்சாயத்து -
2031 வரை அண்ணாமலை காத்திருக்க மாட்டார்.. அவரின் உண்மையான திட்டம் இதுதான்.. வெளியான தகவல்! -
Vetri Payanam: கன்னியாகுமரி டூ சென்னை வரை பெண்களுக்கு இலவச பஸ் பயணம்! அறிவிக்கிறாரா முதல்வர் விஜய்? -
தமிழகத்திற்கு வந்த 330 டிஎம்சி காவிரி நீர்! இது புதிய சாதனை.. ஆனா இந்தாண்டு பயங்கர அதிர்ச்சி இருக்கு -
7 ஐபிஎஸ் அதிராரிகள் அதிரடி மாற்றம்.. "மதுரை கமிஷனர் டூ சென்னை சட்டம் ஒழுங்கு!" வெளியான லிஸ்ட் -
அண்ணாமலையின் மூவ்! ஒன்னும் புதுசா இல்லை.. பாஜகவின் இன்னொரு கிளைதான்! கிளம்பும் விமர்சனம்! -
2020-ல் ரஜினி தொடங்கவிருந்த கட்சியில் இணையுமாறு கேட்டார்! நான் மறுத்துவிட்டேன்! அண்ணாமலை பரபரப்பு -
பேய் மழை வெளுக்கப் போகுது.. கோவை, நீலகிரியில் மிக கனமழை! 11 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை! -
கோவை, நீலகிரியில்.. கன முதல் மிக கனமழை பெய்யும்! மொத்தம் 11 மாவட்டங்களுக்கு வார்னிங்! -
சென்னையில் மழை வெளுக்கப்போகுது.. மொத்தமா 9 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை! அடுத்த 2 மணி நேரம் உஷார் -
நீல நிறமாக மாறிய.. 3 மாத பச்சிளம் குழந்தையின் உடல்! உயிரை காப்பாற்ற உடனே உதவுங்கள்!












Click it and Unblock the Notifications