கேரளாவுக்கு மணல் கடத்தல்-10 லாரிகள் பறிமுதல்
தக்கலை: பத்மனாபுரம் ஆர்டிஓ அதிரடி நடவடிக்கை மேற்கொண்டு கேரளாவுக்கு மணல் கடத்திச் ஏற்றி சென்ற 10 லாரிகளை மடக்கிப் பிடித்தனர்.
தமிழகத்திலிருந்து கேரளாவுக்கு மணல் கொண்டு செல்ல கூடாது என்ற அரசின் உத்தரவை மீறி தினமும் நூற்றுக்கணக்கான லாரிகளில் மாற்று வழிகளில் மணலை கொண்டு செல்கின்றனர்.
அவ்வப்போது அதிகாரிகளால் மடக்கப்படும் லாரிகளுக்கு அபாரத் தொகை கட்டி விட்டு மீண்டும் லாரியை மீட்டு பழையபடி தங்கள் கடத்தல் வியாபாரத்தை தொடங்கி விடுகிறார்கள். தமிழகத்தை விட கேரளாவில் அதிக விலை கிடைப்பதினால் அதிகாரிகள் தடுத்த பிறகும் தினமும் கடத்தல் தொடர்ந்து கொண்டேதான் இருக்கிறது.
இந்நிலையி்ல் பத்மனாபுரம் ஆர்டிஓ தேவதாஸ் தலைமையில் கள்குளம் தாசில்தார் பால்சுந்தர் ஜான், ஆய்வாளர் கண்ணன், தக்கலை போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆகியோர் அதிரடியாக மணல் லாரிகளை சோதனை போட்டனர்.
தென்கரை, கொள்ளன்விளை, பனைக்கோடு பகுதிகளில் கேரளாவுக்கு மணல் கடத்த முயன்ற 10 லாரிகளை பிடித்தனர். பிடிக்கப்பட்ட மணல் லாரிகள் ஆர்டிஓ அலுவலகம், தாலுகா அலுவலங்களில் நிறுத்தப்பட்டுள்ளன.












Click it and Unblock the Notifications