நாமக்கல்லில் 31 பெட்ரோல் குண்டுகள் கண்டுபிடிப்பு - 2 பேர் கைது
நாமக்கல்: நாமக்கல்லில் 31 பெட்ரோல் குண்டுகள் சிக்கியுள்ளன. இவற்றைப் பதுக்கி வைத்திருந்த 2 பேர் கைது செய்யப்பட்டனர். நகராட்சி கவுன்சிலர் ஒருவருக்கு போலீஸார் வலை வீசியுள்ளனர்.
நாமக்கல் மேட்டுத்தெருவை சேர்ந்தவர் அன்பு என்கிற அன்பழகன். நகராட்சியில் சுயேச்சை கவுன்சிலராக இருக்கிறார். அன்புவிந் மகன் ஹரி (25). இவர் நாமக்கல் பஸ்நிலையத்தில் ஹோட்டல் வைத்துள்ளார்.
இவருக்கும், நாமக்கல் கொசவம்பட்டியை சேர்ந்த ஆட்டோ டிரைவர் அழகு மலைக்கும் என்பவருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதில், இருவரும் காயமடைந்தனர்.
இந்த நிலையில் போலீசார் நேற்று மேட்டுத்தெருவில் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அன்பு வீட்டின் அருகே உள்ள காலிநிலத்தில் பெட்ரோல் மற்றும் வார்னீஷ் ஆகியவற்றை பாட்டிலில் ஊற்றி, வெடிகுண்டு தயாரித்து கொண்டு இருந்த 2 பேரை சுற்றி வளைத்தனர்.
விசாரணையில் அவர்கள் நாமக்கல் ரகுவரன் (20) என்பதும், பாஸ்கர் (35) என்பதும் தெரியவந்தது.
அவர்கள் தயாரித்து வைத்திருந்த 31 வெடிகுண்டு பாட்டில்களையும், அவற்றில் இருந்து 2 ஆயிரத்து 500 மி.லிட்டர் பெட்ரோல் மற்றும் 1520 மி.லிட்டர் வார்னீஷ் ஆகியவற்றையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.
கவுன்சிலர் அன்பழகன் பணம் கொடுத்து மனித உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் வகையில், பெட்ரோல் கையெறி வெடிகுண்டுகள் தயாரிக்க சொன்னதாக கூறினர்.
இதையடுத்து அன்பழகனை போலீஸார் தேடினர். ஆனால் அவர் தலைமறைவாகி விட்டார். அவரைப் பிடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications