இண்டர்நெட் மையங்களில் சோதனை-கமிஷ்னர் அலுவலகம் முற்றுகை
சென்னை: சென்னையில் கண்காணிப்பு கேமராக்கள் இல்லாத இண்டர்நெட் மையங்களை மூட உத்தரவிடப்பட்டுள்ளது. இதையடுத்து இன்டர்நெட் மைய உரிமையாளர்கள் இன்று போலீஸ் கமிஷ்னர் அலுவலகத்தை முற்றுகையிட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
நேற்று முன்தினம் முதல்வரின் தனிப்பிரிவு அலுவலகத்துக்கு ஜெயசீலன் என்ற பெயரில் மிரட்டல் போன் நம்பருடன் கூடிய இ-மெயில் வந்தது. அதில்,
சென்னை விமான நிலையம், துறைமுகம், மற்றும் முக்கியமான கட்டிடங்கள் போன்றவற்றில் குண்டுகள் வைக்கப்பட்டுள்ளன. தமிழகம் முழுவதும் குறி வைத்து தாக்குதலுக்கு திட்ட மிட்டுள்ளோம். எனவே வருகிற 16ம் தேதி தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் குண்டுகள் வெடித்து சிதறும். முடிந்தால் தடுத்துப் பாருங்கள். என்னையும் பிடித்துப் பாருங்கள் என்று கூறப்பட்டிருந்தது.
இதையடுத்து சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தியதில் வடபழனி பகுதியில் உள்ள சந்தூஸ் என்ற இன்டர்நெட் மையத்திலிருந்து இந்த இ-மெயில் வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இ மெயிலில் இருந்த போன் நம்பரை வைத்து சேலத்தில் இருந்த ஜெயசீலன் என்பவரை போலீசார் பிடித்தனர். அவரை சென்னையிலிருந்து இ மெயில் மிரட்டல் வந்த இன்டர்நெட் மையத்துக்கும் அழைத்துச் சென்று போலீசார் விசாரணை நடத்தினர்.
அப்போது மிரட்டல் இ மெயிலுக்கும், ஜெயசீலனுக்கும் தொடர்பில்லை என்பதும் அவரை பழி வாங்க யாரோ மிரட்டல் அனுப்பியதும் தெரியவந்தது. இதையடுத்து சந்தூஸ் இன்டர்நெட் மையத்துக்கு சீல் வைக்கப்பட்டது.
இந்த சம்பவத்தையடுத்து சென்னையில் ஆயிரக்கணக்கான இன்டர்நெட் மையங்களில் போலீசார் அதிரடி ரெய்ட் நடத்தினர்.
இதில் பெரும்பாலான மையங்களில் விதிமுறைகள் சரியாக பின்பற்றப்படவில்லை. மையத்திற்கு வருபவர்கள் பெயர் பதிவேடு சரியாக பராமரிக்கப்படவில்லை. மேலும் விதிகளின்படி கண்காணிப்பு கேமராக்களும் வைக்கவில்லை என்பது தெரியவந்தது.
இதையடுத்து உடனடியாக கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தவும், மீறினால் அதை மூடவும் உத்தரவிடப்பட்டது.
ஏற்கனவே கால அவகாசம் தரப்பட்டும் கேமராக்கள் பொருத்தாக 3 வடபழனி பகுதி இண்டர்நெட் மையங்களை உடனடியாக மூடவும் போலீசார் உத்தரவிட்டனர். இதையடுத்து அவை மூடப்பட்டு சீல் வைக்கப்பட்டன.
இதையடுத்து இன்று காலை நூற்றுக்கணக்கான இன்டெர்நெட் மைய உரிமையாளர்கள் போலீஸ் கமிஷ்னர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
சோதனை என்ற பெயரில் தங்களுக்கு போலீசார் அநாவசியமான தொல்லைகள் கொடுப்பதாகவும், நூற்றுக்கும் மேற்பட்ட இன்டர்நெட் மையங்களை போலீசார் மூடியுள்ளதாகவும், பலரை போலீசார் பிடித்துச் சென்றுள்ளதாகவும், தங்களை கிரிமினல்கள் போல நடத்துவதாகவும் அவர்கள் புகார் கூறினர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
-
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்!












Click it and Unblock the Notifications