வேலையில்லா பொறியியல் பட்டதாரிகள்!
டெல்லி: 11வது ஐந்தாண்டு திட்டகால இறுதிக்குள் பொதுத்துறை மற்றும் தனியார்த்துறை மூலம் 1.5 கோடி வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படும் என்று மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத்துறை இணையமைச்சர் ஹரீஷ் ரவாத் கூறினார்.
மக்களவையில் பேசிய அவர்,
2007ம் ஆண்டு கணக்கெடுப்பின்படி 2 லட்சம் பொறியாளர்களும், 1.32 லட்சம் பட்டயப் படிப்பு முடித்தவர்களும் வேலையில்லாமல் உள்ளனர்.
எனினும் தற்போது ஏற்பட்டுள்ள பொருளாதாரச் சரிவு காரணமாக வேலையிழந்த பொறியாளர்கள், டிப்ளமோதாரர்களையும் கணக்கிட்டால் இந்த எண்ணிக்கை மேலும் அதிகம்.
படித்துவிட்டு வேலையில்லாமல் இருக்கும் பொறியியல் மாணவர்கள் எண்ணிக்கை 2003ம் ஆண்டிலிருந்து படிப்படியாக அதிகரித்து வருகிறது. 2003ல் 82,000 பேர் வேலையில்லாமல் இருந்தனர். இது 2005ல் 1.12 லட்சமாக உயர்ந்தது.
ஆனால், 2006ல் இந்த எண்ணிக்கை 48,000 ஆகக் குறைந்தது. இப்போது மீண்டும் 2 லட்சமாக அதிகரித்துவிட்டது.
அதேபோல 2003ல் பட்டயப்படிப்பு முடித்தவர்கள் 1.31 லட்சம் பேர் வேலையில்லாமல் இருந்தனர். இது 2005ல் 1.07 லட்சமாக இருந்தது. 2006ல் இது 45,000 ஆகக் குறைந்தது. இப்போது மீண்டும் 1.32 லட்சமாக அதிகரித்துவிட்டது.
11வது ஐந்தாண்டு திட்ட காலத்தில் குறைந்தபட்சம் 1 கோடி பேருக்கு வேலைவாய்ப்பை உருவாக்க திட்டமிட்டுள்ளோம். திட்டகால இறுதிக்குள் இது 1.5 கோடியாக அதிகரிக்கப்படும் என்றார்.
-
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி












Click it and Unblock the Notifications