பர்சனல் கம்ப்யூட்டர்கள் விற்பனையில் பெரும் சரிவு

பொருளாதார சீர்குலைவு கம்ப்யூட்டர்களையும் இப்போது கடிக்கத் தொடஙகிவிட்டது. முதல் முறையாக கம்ப்யூட்டர் விற்பனை வளர்ச்சி விகிதம் நெகட்டிவ் அளவை எட்டி, -7 சதவீதமாக உள்ளது.
கடந்த ஆண்டில் இது 7 சதவீதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
இருப்பினும் பழையபடி மீண்டும் வளர்ச்சிப் பாதையில் கம்ப்யூட்டர் விற்பனை செல்லும் என ஹார்ட்வேர் தயாரிப்பாளர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து தகவல் தொழில்நுட்ப உற்பத்தியாளர்கள் சங்க செயல் இயக்குநர் வின்னி மேத்தா கூறுகையில், பொருளாதாரத்தில் ஏற்பட்டுள்ள தடுமாற்றத்தால் வாடிக்கையாளர்களின் மன நிலையிலும் மாறுதல் காணப்பட்டது. இதுவே ஐடி துறையையும் பாதித்துள்ளது.
2008-09ம் ஆண்டில், டெஸ்க்டாப், நோட்புக்ஸ், நெட்புக்ஸ் ஆகியவற்றின் விற்பனை மொத்தமாக 67.9 லட்சமாக இருந்தது. கடந்த நிதியாண்டில் இது 73.3 லட்சமாக இருந்தது.
சந்தை வளர்ச்சி 2003ம் ஆண்டு முதல் 2009 வரையிலான கால கட்டத்தில் 17 சதவீத வளர்ச்சியில் உள்ளது.
தற்போது கம்ப்யூட்டர் விற்பனையில் சரிவு காணப்பட்டாலும் கூட 2009-2010 நிதியாண்டில் நிலைமை மாறும் என நம்புகிறோம்.
2009 நிதியாண்டில், டெஸ்க்டாப் விற்பனை 52.7 லட்சமாக இருந்தது. இது கடந்த ஆண்டை விட 4 சதவீதம் குறைவாகும். நோட்புக் எண்ணிக்கை (நெட்புக்கையும் சேர்த்து) 15.1 லட்சமாக இருந்தது. இது கடந்த ஆண்டை விட 17 சதவீதம் குறைவாகும் என்றார் வின்னி.
-
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி












Click it and Unblock the Notifications