கருணாநிதி வழக்கு-வைகோ மீது குற்றச்சாட்டுகள் பதிவு
சென்னை: முதல்வர் கருணாநிதி தொடர்ந்த அவதூறு வழக்கில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ மீது இன்று எழும்பூர் தலைமை பெருநகர குற்றவியல் நீதிமன்றத்தில் குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டன.
கடந்த மே மாதம் புரசைவாக்கத்தில் நடந்த ஈழத் தமிழர் ஆதரவு பொதுக் கூட்டத்தில் பேசிய வைகோ,
இயக்குனர் பாரதிராஜாவிந் அலுவலகம் தாக்கப்பட்டதற்கு முதல்வர் கருணாநிதியின் தூண்டுதலே காரணம் என்று குற்றம் சாட்டனார்.
இது கருணாநிதியின் பெயருக்கு களங்கம் ஏற்படுத்திவிட்டதாகக் கூறி வைகோ மீது எழும்பூர் நீதிமன்றத்தில் அமைச்சர் ஆற்காடு வீராசாமி வழக்குத் தொடர்ந்தார்.
இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. இதையடுத்து வைகோ நீதிமன்றத்தில் ஆஜரானார். அப்போது அவர் மீதான குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டன.
வைகோவிடம், உங்கள் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளுக்கு என்ன சொல்கிறீர்கள் என்று நீதிபதி கேட்டபோது, நான் குற்றவாளி அல்ல, இந்த குற்றச்சாட்டுகளை மறுக்கிறேன் என்றார்.
இதையடுத்து வழக்கு விசாரணையை அடுத்த மாதம் 8ம் தேதிக்கு நீதிபதி ஒத்தி வைத்தார்.
வெளியில் வந்த வைகோ நிருபர்களிடம் கூறுகையில்,
தமிழக அரசு பழி வாங்கும் நோக்கத்துடன் செயல்படுகிறது. மதிமுகவினர் தொடர்ந்து கைது செய்யப்படுகிறார்கள். நாஞ்சில் சம்பத் உள்ளிட்ட முன்னணி நிர்வாகிகள் மீது தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதுபோன்ற அடக்குமுறைகளை கண்டு நாங்கள் அஞ்சப் போவதில்லை. நிச்சயம் நீதியே வெல்லும் என்றார்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications