ஓகேனக்கல்லில் வெள்ள அபாய எச்சரிக்கை

கேரளத்திலும் கர்நாடகத்திலும் பருவ மழை சூடு பிடித்துள்ளதால் கபினி மற்றும் கிருஷ்ணராஜ சாகர் அணைகள் நிரம்பிவிட்டன. இதையடுத்து அங்கிருந்து உபரி நீர் காவிரியி்ல் வெளியேற்றப்பட்டு வருகிறது.
அணைகளைக் காப்பதற்காக வெளியேற்றப்படும் இந்த உபரி நீர், ஓகேனக்கல் வழியாக மேட்டூர் அணைக்கு வந்து கொண்டுள்ளது.
மேட்டூர் அணைக்கு தற்போது விநாடிக்கு 16,000 கன அடி நீர் வந்து கொண்டுள்ளது. அணையிலிருந்து குடிநீருக்காக 1,000 கன அடி நீர் திறந்து விடப்படுகிறது.
இதனால் அணையின் நீர் மட்டம் இன்று காலை 60.62 அடியாக உயர்ந்துள்ளது.
இந் நிலையில் கர்நாடகத்தில் இருந்து வரும் நீரின் அளவு அதிகரித்துக் கொண்டுள்ளதால் ஓகேனக்கல் மற்றும் அதன் சுற்றுப் பகுதி கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
ஓகேனக்கல் அருவியில் யாரும் குளிக்க வேண்டாம் என எச்சரிக்கப்பட்டுள்ளது. மேலும் படகுகளை இயக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து தர்மபுரி மாவட்ட ஆட்சியர் அமுதா வெளியிட்டுள்ள உத்தரவில், தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் உடனடியாக அப் பகுதிகளை விட்டு வெளியேறுமாறு கூறியுள்ளார்.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications