காங்கிரசில் இணைகிறார் திருநாவுக்கரசர்!
சென்னை: பாஜக அகில இந்தியச் செயலாளர் திருநாவுக்கரசர் காங்கிரஸ் கட்சியில் சேருவார் என்று தெரிகிறது.
திருநாவுக்கரசரின் 61வது பிறந்த நாள் விழா சென்னை தேனாம்பேட்டை காமராஜர் அரங்கத்தில் நடந்தது.
அப்போது தனக்கு வாழ்த்துச் சொல்ல வந்த மூத்த காங்கிரஸ் தலைவர் குமரி அனந்தனின் மகளும், பாஜக மாநில பொதுச் செயலருமான தமிழிசையிடம் இதை மறைமுகமாகத் தெரிவித்தார் திருநாவுக்கரசர்.
இதுவரை உங்களுடன் பணியாற்றினேன். இனி உங்கள் அப்பாவுடன் பணியாற்றப் போகிறேன் என்று திருநாவுக்கரசர் சிரித்துக் கொண்டே தமிழிசையிடம் கூறினார்.
மக்களவைத் தேர்தல் முடிவுக்குப் பிறகு நடந்த பாஜக மாநில நிர்வாகிகள் கூட்டம், மாநில செயற்குழுக் கூட்டம் என கட்சியின் அனைத்துக் கூட்டங்களையும் திருநாவுக்கரசரும், அவரது ஆதரவாளர்களும் புறக்கணித்து வருகின்றனர்.
இந் நிலையில் ராகுல் காந்தி உள்ளிட்ட சில காங்கிரஸ் தலைவர்களை திருநாவுக்கரசர் டெல்லியில் சந்தித்துப் பேசியுள்ளதாகத் தெரிகிறது.
இதனால் விரைவில் பாஜக மாநிலங்களவை எம்பி பதவியை ராஜிநாமா செய்துவிட்டு திருநாவுக்கரசர் காங்கிரஸ் கட்சியில் சேருவார் என்று தெரிகிறது.
-
“EPS மாலையிட்டால்தான் என் ஆத்மா சாந்தியடையும்”.. அதிமுக தொண்டனின் உடலுக்கு அஞ்சலி செலுத்திய எடப்பாடி -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு -
“மாவட்ட செயலாளர் தொலைந்து போக வேண்டும்”.. அதிமுகவை விட்டு வெளியேறும் முக்கிய நிர்வாகி விட்ட சாபம்! -
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்? -
எல்லாத்தையும் நான் பாத்துக்குறேன்..நீங்க ஒத்துழைப்பு மட்டும் கொடுங்க! ர.ர.க்களுக்கு எடப்பாடி மெசேஜ்! -
"வீட்டு வேலை செய்த பெண் டூ மாண்புமிகு அமைச்சர்.." மேற்கு வங்கத்தில் பாஜக செய்த சம்பவம்! -
எடப்பாடி பழனிசாமி இந்த அதிர்ச்சியை தாங்குவாரா? மேலும் 3 அதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா? -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்! -
வாழை மரமா? ஆல மரமா? அந்தரத்தில் தொங்குதே அதிமுக! எடப்பாடிக்கு இன்னும் ஒரே ஒரு சான்ஸ் இருக்கு! என்ன? -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள்












Click it and Unblock the Notifications