தமிழகம் நோக்கி படையெடுக்கும் நிறுவனங்கள்!
Subscribe to Oneindia Tamil

இதுகுறித்து சட்டமன்றத்தில் பேசிய ஸ்டாலின் கூறியதாவது:
கடந்த மூன்று ஆண்டுகளில் மட்டும் 9 நிறுவனங்கள் மூலம் தமிழகம் ரூ.6148 கோடி முதலீடாகப் பெற்றுள்ளது.
இந்த நிதியாண்டு மட்டும் மேலும் 5 புதிய திட்டங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இவற்றின் மூலம் மேலும் ரூ.6,500 கோடி முதலீடாக வரவிருக்கிறது.
கடந்த மூன்று ஆண்டுகளில் 31 தொழிற்சாலைகள் தமிழகத்தில் திறக்கப்பட்டுள்ளன. இவற்றின் மூலம் 86,562 புதிய வேலைகள் உருவாக்கப்பட்டுள்ளன. மறைமுகமாக 1,22,130 வேலைவாய்ப்புகள் கிடைத்துள்ளன.
இதுதவிர மேலும் 22 நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. இவற்றில் மோட்டோராலா, டெல், சாம்சங், காபரோ, சான்மினா, ஹூண்டாய், க்ரோத்லிங்க் மற்றும் ஹான்ஸன் ட்ரைவ்ஸ் போன்றவை அடங்கும். மேலும் சில நிறுவனங்களும் இந்த வரிசையில் உள்ளன என்றார்.












Click it and Unblock the Notifications