'ஸ்வைன்'- ஹைதராபாத் கூகுள் அலுவலகத்திற்கு லீவு!
ஹைதராபாத்: பன்றிக் காய்ச்சல் பீதி காரணமாக தனது ஹைதராபாத் அலுவலகத்தை 2 நாட்களுக்கு மூடியுள்ளது கூகுள்.
ஹைதராபாத் கூகுள் அலுவலக ஊழியர் ஒருவருக்கு பன்றிக் காய்ச்சல் பரவியிருப்பது தெரிய வந்ததைத் தொடர்ந்து இந்த 2 நாள் விடுமுறை அறிவித்துள்ளது கூகுள்.
அந்த ஊழியர் தவிர மேலும் 7 பேருக்கும் அறிகுறிகள் தெரிவதாலும் அவசரமாக விடுமுறை விடப்பட்டுள்ளதாம்.
நேற்று மூடப்பட்ட அலுவலகம் இன்றும் மூடப்பட்டுள்ளது. நாளை மீண்டும் பணிகளைத் தொடங்கவுள்ளனர் ஹைதராபாத் கூகுள் ஊழியர்கள்.
தனது ஊழியர்களில் ஒருவருக்கு பன்றிக் காய்ச்சல் உறுதிப்படுத்தப்பட்டுள்ளாக தெரிவித்துள்ள கூகுள், மேலும் 7 பேருக்கு அறிகுறிகள் தெரிவதாகவும், இருப்பினும் அது உறுதிப்படுத்தப்படவிலலை என்றும் விளக்கியுள்ளது.
இதற்கிடையே, ஹைதராபாத்தில் உள்ள சத்யம், ஜென்பேக்ட், அமேசான் டெவலப்மென்ட் மையம் உள்ளிட்ட சாப்ட் வேர் நிறுவனங்கள், தங்களது ஊழியர்களை கவனமுடன் இருக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளன.
மேலும், டாக்டர்கள் குழுக்களையும் வரவழைத்து ஊழியர்களுக்கு மருத்துவப் பரிசோதனைகளையும் நடத்தி வருகின்றன.
ஹைதராபாத் சாப்ட்வேர் துறையினர் பீதிக்குள்ளாக முக்கிய காரணமே, ஆந்திராவில் பன்றிக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலனோர் சாப்ட்வேர் என்ஜீனியர்கள் என்பதால்.
இவர்களில் பலரும் வெளிநாடுகளுக்குப் போய் விட்டு வந்ததால் பன்றிக் காய்ச்சல் பாதிப்புக்கு ஆளானவர்கள். இதன் காரணமாக அனைத்து சாப்ட்வேர் அலுவலகங்களிலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
-
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
சீனாவை சுற்றி வளைக்கும் இந்தியா.. இதுதான் ரியல் மாஸ்டர் பிளான்.. இனிமேல் தான் இருக்கு ஆட்டமே -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக!












Click it and Unblock the Notifications