கப்பல்.. தூத்துக்குடியை 'வாட்டும்' குஜராத் உப்பு
தூத்துக்குடி: குஜராத்திலிருந்து 28,000 டன் உப்பு கப்பல் இன்று தூத்துக்குடிக்கு வருகிறது. இதனால் தூத்துக்குடியில் உப்பு விலை சரியும் என்பதால் உற்பத்தியாளர்கள் கவலை அடைந்துள்ளனர்.
உப்பு உற்பத்திக்கு பெயர் பெற்ற தூத்துக்குடியிலிருந்து இலங்கை, இந்தோனேசியா, சிங்கபூர், ஆகிய நாடுகளுக்கு உப்பு ஏற்றுமதியாகிறது. ஆனால் கடந்த ஆண்டு பெய்த கனமழையால் தூத்துக்குடியில் உப்பு விளைச்சல் 50 சதவீதம் குறைந்தது.
அதே நேரத்தில் குஜராத்தில் உப்பு உற்பத்தி முழுவீச்சில் நடப்பதாலும், கப்பல் வாடகை வெகுவாகக் குறைந்துள்ளதாலும், அங்கிருந்து தூத்துக்குடிக்கு கடந்த 3 மாதங்களாக உப்பு வரத்து தொடங்கியுள்ளது. இங்கிருந்து அது வெளிநாடுகளுக்கு ஏற்றுமதியாகிறது.
இந்நிலையில் குஜராத் மாநிலம் காண்ட்லா துறைமுகத்தில் இருந்து கடந்த 12ம் தேதி மேலும் உப்புக் கப்பல் தூததுக்குடி துறைமுகத்திற்கு புறப்பட்டது. மகாபத்மஜா என்ற பெயருடைய இந்த கப்பலில் 28,000 டன் உப்பு தூத்துக்குடிக்கு வருகிறது. இன்று இந்தக் கப்பல் தூத்துக்குடிக்கு வந்து சேரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தூத்துக்குடி துறைமுகம் உருவான நாளிலிருந்து இங்கிருந்துதான் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதியாவது வழக்கம். ஆனால் இந்தாண்டுதான் குஜராத் உப்பு தூத்துக்குடி துறைமுகத்திற்கு கொண்டு வரப்படுகிறது.
கடந்த 3 மாதங்களுக்கு முன்பு டன்னுக்கு ரூ. 3,000 ஆக இருந்த தூத்துக்குடி உப்பு விலை, குஜராத் உப்பு வருகையால் தற்போது ஆயிரத்து ரூ. 200 ஆகக் குறைந்துள்ளது.
இந்த நிலையில் 28,000 டன் உப்புக் கப்பல் மூலம் இன்று தூத்துக்குடிக்கு வருவதால் விலை மேலும் குறையும் என்ற கலக்கத்தில் உப்பு உற்பத்தியாளர்கள் உள்ளனர்.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications