ஊழல்-கோவை அண்ணா பல்கலை துணைவேந்தர் மீது புகார்
சென்னை: ஊழல் புகாரில் சிக்கியுள்ள கோவை அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் டாக்டர் ராதாகிருஷ்ணன் மீது லஞ்ச ஒழிப்புப் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும் என்று கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக சென்னையைச் சேர்ந்த வழக்கறிஞர் சிவபாண்டி என்பவர் மனு தாக்கல் செய்துள்ளார். அவரது சார்பில் மூத்த வழக்கறிஞர் என்.ஆர்.சந்திரன் ஆஜரானார்.
சிவபாண்டி தனது மனுவில், கோவை அண்ணா பல்கலைக் கழகத்தின் துணைவேந்தராக டாக்டர் ராதாகிருஷ்ணன் 2.7.2007-ம் தேதி பதவியேற்றார். அவர் பதவியேற்ற நாளில் இருந்து அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி முறைகேட்டில் ஈடுபட்டுள்ளார்.
அரசு - தனியார் பங்களிப்புடன் கூடிய திட்டத்தை கொண்டு வந்து அதன் மூலம் தனக்கு வேண்டப்பட்ட நிறுவனங்களுக்கு புதிய கல்லூரிகள் தொடங்க அனுமதி வழங்கியுள்ளார். அத்துடன் தனது மனைவி பெயரில் ஒரு டிரஸ்ட் தொடங்கி அதன் மூலம் ரூ.1.5 கோடி மதிப்புள்ள அளவுக்கு சொத்துக்களை வாங்கி குவித்துள்ளார்.
மனைவி பெயரில் புதிய பொறியியல் கல்லூரி தொடங்கவும் அனுமதி வழங்கியுள்ளார். பேராசிரியர் நியமனத்திலும் முறைகேடு செய்துள்ளார். இவரது முறைகேடு குறித்து 30.5.2009-ம் தேதி தமிழக அரசின் தலைமை செயலாளர், கவர்னர், லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குனர் ஆகியோரிடம் புகார் அளித்தேன்.
ஆனால் இதுவரை இந்த புகார் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்பட வில்லை. எனவே நான் கொடுத்த புகார் மனு மீது லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது.
தலைமை நீதிபதி எச்.எல்.கோகலே, நீதிபதி வெங்கட்ராமன் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் முன்பு இன்று இந்த மனு பரிசீலனைக்கு வந்தது.
என்.ஆர்.சந்திரன் வாதிடுகையில், கோவை அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் முறைகேடு குறித்து விசாரிக்க கவர்னர் உத்தரவிட்டு இருப்பதாக பத்திரிகைகளில் செய்தி வந்துள்ளது. இதுபற்றிய அரசின் நிலையை தெரியப்படுத்த வேண்டும் என்று கோரினார்.
அரசுத் தரப்பில் கேட்டு பதில் சொல்வதாக அரசு வக்கீல் தெரிவித்தார்.
இதையடுத்து இன்று பிற்பகலுக்கு மனுவை ஒத்திவைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
துணைவேந்தர் மீதான ஊழல் புகார்கள் குறித்து விசாரணை நடத்துமாறு ஊழல் தடுப்புப் போலீஸாருக்கு ஏற்கனவே ஆளுநர் பர்னாலா உத்தரவிட்டுள்ளார். இருப்பினும் போலீஸார் இன்னும் விசாரணையைத் தொடங்காமல் இருப்பது குறிப்பிடத்தக்கது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications