இந்தியர்களை விஞ்சுங்கள்-ஒபாமா அட்வைஸ்

Subscribe to Oneindia Tamil

வாஷிங்டன்: 21வது நூற்றாண்டில் கல்வியில், இந்தியா, சீனாவை விட அமெரிக்கா உயர்ந்து நிற்கும் வகையிலான அடித்தளத்தை நான் அமைத்துக் கொண்டிருக்கிறேன். அதைப் பயன்படுத்தி இந்த இரு நாடுகளையும் முந்த அமெரிக்கர்கள் முயல வேண்டும் என்று கூறியுள்ளார் அதிபர் ஒபாமா.

வாரன் மிச்சிகனில் நடந்த கூட்டம் ஒன்றில் ஒபாமா பேசுகையில், 21வது நூற்றாண்டில் கல்வியை மிகச் சிறந்த இடத்திற்குக் கொண்டு செல்லும் நடவடிக்கைகளை நாம் ஏற்கனவே தொடங்கி விட்டோம்.

இதைப் பயன்படுத்திக் கொண்டு அமெரிக்கர்கள் மிகக் கடுமையாக படித்து, இந்தியா, சீனாவை முந்த முயற்சிக்க வேண்டும்.

இந்த இரு நாடுகள் மட்டுமல்லாது, உலகில் உள்ள அனைத்து நாடுகளையும் விட அமெரிக்கர்கள்தான் கல்வியில் சிறந்தவர்கள் என்ற நிலையை எய்த வேண்டும்.

அமெரிக்க பெற்றோர்கள் தங்களது பிள்ளைகளின் கல்வியில் கூடுதல் ஆர்வம் செலுத்த வேண்டும். இந்தியர்களும், சீனர்களும் படிப்பதைப் பாருங்கள். அவர்களை விட அதி புத்திசாலிகளாக, கல்வி கற்பதில் தீவிர வேட்கை கொண்டவர்களாக அமெரிக்கப் பிள்ளைகள் மாற பெற்றோர்கள் உதவ வேண்டும்.

கல்வியில் இன்று இந்தியாவும், சீனாவும் முன்னணியில் உள்ளன. அந்த இடத்தை அமெரிக்கப் பிள்ளைகள் பெற வேண்டும்.

2020ம் ஆண்டுக்குள் அமெரிக்காவை கல்வி கற்பதில் சிறந்த நாடாக, கல்வி கற்பதில் அமெரிக்கர்கள் சிறந்தவர்களாக மாற்றும் நோக்கில் எனது அரசு செயல்பட்டு வருகிறது.

உலக அளவில் கல்லூரிப் படிப்பை முடித்தவர்கள் அதிக அளவில் உள்ள நாடு என்ற அமெரிக்கா பழைய பெருமையை மீட்டெடுக்க வேண்டும். அதை நாம் நிச்சயம் சாதிப்போம் என்ற நம்பிக்கை உள்ளது. அடுத்த பத்து ஆண்டுகளில் இது நிச்சயம் நடக்கும் என்றார் ஒபாமா.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+