சென்னை: மிளகாய் மண்டியில் தீ-ரூ1.5 கோடி நாசம்
சென்னை: சென்னை அருகே நல்லூர் என்ற இடத்தில் உள்ள மிளகாய் மண்டியில் இன்று பெரும் தீவிபத்து ஏற்பட்டது. இதில் ரூ. 1.5 கோடி மதிப்புள்ள பொருட்கள், மிளகாய் ஆகியவை எரிந்து நாசமாயின.
சென்னை தியாகராய நகரை சேர்ந்தவர் நரசிம்மராயலு. இவர் நல்லூர் ஊராட்சி அம்பேத்கார் நகர் திருவள்ளூர் சாலையில் மிளகாய் மண்டி ஒன்றை நடத்தி வருகிறார்.
இங்கு ஆந்திரா மாநிலம் குண்டூரில் இருந்து மிளகாயும், ஒரிசாவில், நாகையில் இருந்து சோளம், வேர்க்கடலையும் வருகின்றன.
இவற்றை மண்டியில் சுத்தம் செய்து மலேசியா, சிங்கப்பூருக்கு கப்பல் மூலம் அனுப்புகின்றனர். இந்த மண்டியில் எப்போதும், ஏராளமான மிளகாய் மற்றும் பொருட்களை ஸ்டாக் இருக்கும்.
இன்று அதிகாலை 2 மணியளவில் திடீரென மண்டியில் தீப்பிடித்துக் கொண்டது. வேகமாக பரவிய தீ கிட்டங்கி முழுவதையும் எரித்து விட்டது.
தீவிபத்தில் ரூ. 1.5 கோடி மதிப்பிலான சோளம், மிளகாய், வேர்க்கடலை ஆகியவை கருகிப் போயின. இந்தத் தீ அருகில் இருந்த கோவில், வீடு ஆகியவற்றுக்கும் பரவியது.
செங்குன்றம், செம்பியம், ஆவடி தீயணைப்பு நிலைய வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.
-
கோயம்பேடு மதுபான பார் மோதலில்.. கார் ஏற்றி கொல்லப்பட்ட இலங்கை இளம்பெண்.. சென்னை வந்தது எப்படி? -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
இடியை இறக்கும் ஆயில் நிறுவனங்கள்.. சென்னையில் வணிக கேஸ் சிலிண்டரின் விலை ரூ.46 உயர்வு! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
மணப்பாக்கம் - சென்னையின் புதிய ஹாட்ஸ்பாட்.. புறநகரை நோக்கி படையெடுக்கும் சென்னை இளசுகள்! -
தமிழ்நாட்டில் பெண்கள், ஆண்களில் மதுப்பழக்கம் உள்ளவர்கள் எத்தனை சதவீதம்? மத்திய அரசு வெளியிட்ட டேட்டா -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
முதியவர்கள் அதிகம் வாழும் மாநிலமாக மாறுகிறதா தமிழ்நாடு..? இதென்னப்பா புது பிரச்சனை? -
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்!












Click it and Unblock the Notifications