குற்றால வளர்ச்சிக்கு ரூ. 4.5 கோடி ஒதுக்கீடு
தென்காசி: குற்றாலம் சுற்றுலா வளர்ச்சி பணிகளுக்கு சுற்றுலாத்துறை ரூ.4 கோடியே 50 லட்சம் ஒதுக்கீடு செய்துள்ளது என சுற்றுலா துறை செயலாளர் இறையன்பு கூறினார்.
குற்றாலத்திற்கு சுற்றுலா துறை முலம் மேற்கொள்ளப்பட வேண்டிய பணிகள் குறித்து ஆய்வு செய்வதற்காக சுற்றுலா துறை செயலாளர் இறையன்பு வந்தார்.
குற்றாலம் மெயினருவி, கார் பார்க்கிங் விஸ்தரிப்பு, படகு குழாம், ஐந்தருவி, புலியருவி, பழைய குற்றால அருவியை பார்வையிட்டார்.
பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில்,
குற்றாலத்தை மேம்பாடு செய்யும் வகையில் தேவையான பணிகளை செய்வதற்காக ரூ.4 கோடியே 50 லட்சம் ரூபாய் சுற்றுலாத் துறை சார்பில் ஓதுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் குற்றாலத்தில் பல்வேறு வசதிகள் செய்யப்படும்.
உடை மாற்றும் அறைகள், கழிப்பிட வசதிகள், பூங்காக்கள் உருவாக்கப்படும். குற்றாலம் பற்றி இந்தியா முழுவதும் விளம்பரம் செய்யப்பட்டு வருகிறது. பிற மாநிலங்களில் வெளிவரும் நாளிதழ்கள், விமானத்தில் வழங்கப்படும் நாளிதழ்களில் குற்றாலம் பற்றி விளம்பரம் செய்கிறோம்.
மெயின் அருவி கார் பார்க்கிங் 38 லட்சம் ரூபாய் செலவில் விஸ்தரிப்பு செய்யப்பட்டுள்ளது. முக்கிய இடங்களில் ஹைமாஸ் லைட் அமைக்கப்படும். இந்திய சுற்றுலா வரைபடம் என்பது கிடையாது.
சுற்றுலா தலங்களை பற்றி விளம்பரம் செய்து வருகிறோம். குற்றாலத்தை உலக அளவில் மேம்படுத்த தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது என்றார் இறையன்பு.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications