லஞ்சம்-பெண் பொறியாளர் கணவருடன் கைது
திருச்சி: வீட்டுக்கு மின் இணைப்பு கொடுக்க விவசாயிடம் லஞ்சம் வாங்கிய மின்வாரிய பெண் உதவிப் பொறியாளர், அவரது கணவர் ஆகியோர் கைது செய்யப்பட்டார்.
துறையூர் அருகே உள்ள சோபனபுரத்தைச் சேர்ந்த விவசாயி செல்வராஜ் தனது வீட்டிற்கு மின் இணைப்பு பெற மின்வாரிய அலுவலகத்தை அணுகினார். பணியில் இருந்த உதவிப் பொறியாளர் ஜெயஸ்ரீ (32), தனக்கு ரூ.1500மும், மின்வாரிய வணிக ஆய்வாளர் வெங்கடேசனுக்கு ரூ.500ம் லஞ்சம் தந்தால் தான் மின் இணைப்பு வழங்கப்படும் என்றார்.
இது குறித்து செல்வராஜ் திருச்சி லஞ்ச ஒழிப்பு போலீசிடம் புகார் செய்தார். இதனையடுத்து போலீசார் சொல்லியபடி ஜெயஸ்ரீயை சந்தித்து செல்வராஜ் சந்தித்து பணத்தைக் கொடுத்தார்.
அதை வாங்கிய ஜெயஸ்ரீ, அங்கிருந்த மின்வாரிய துப்புரவு பணியாளர் கமலத்திடம் அந்தப் பணத்தை கொடுத்து அருகில் உள்ள வீட்டில் இருக்கும் தனது கணவரிடம் அதைக் கொடுக்குமாறு கூறினார்.
இதையடுத்து ஜெயஸ்ரீயின் கணவரான வழக்கறிஞர் பாண்டியனிடம் பணத்தை கமலம் கொண்டு போய் கொடுத்தார்.
ஜெயஸ்ரீ பணம் வாங்கியதையும் அதை கமலம் அவரது கணவரிடம் கொடுப்பதையும் நேரில் கண்காணித்த லஞ்ச ஒழிப்பு போலீசார் ஜெயஸ்ரீயையும் பாண்டியனையும் கையும் களவுமாகப் பிடித்தனர்.
அதே போல செல்வராஜிடமிருந்து ரூ.500 பணம் வாங்கிய வணிக ஆய்வாளர் வெங்கடேசனும் பிடிப்பட்டார்.
இதைத்தொடர்ந்து ஜெயஸ்ரீ, பாண்டியன், வெங்கடேசன், லஞ்சம் வாங்க உதவிய துப்புரவுப் பணியாளர் கமலம் ஆகிய 4 பேரையும் லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர்.
வனத்துறை அதிகாரி கைது
அதே போல சென்னையில் ரூ.10,000 லஞ்சம் வாங்கிய வனத்துறை அதிகாரி கைது செய்யப்பட்டார்.
சென்னை மேற்கு முகப்பேரை சேர்ந்த பாண்டியன் செம்மர வியாபாரம் செய்கிறார். கேரளாவில் இருந்து லாரி மூலம் செம்மரம் வாங்கி வந்து அதை தன் குடோனில் வைத்திருக்க சென்னை தேனாம்பேட்டை டி.எம்.எஸ். வளாகத்தில் உள்ள வனத்துறை அலுவலகத்தில் விண்ணப்பித்தார்.
இந்த அனுமதியை வழங்க ரூ.10,000 லஞ்சம் கேட்டார் உதவி வனக்காவலர் ராஜலிங்கராஜா (55). இதுகுறித்து பாண்டியன் லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் கொடுத்தார்.
பின்னர் அவர்கள் கூறியபடி பணத்தை ராஜலிங்கராஜாவிடம் தந்தார். அப்போது மாறுவேடத்தில் அங்கிருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் அவரைக் கைது செய்தனர்.
சென்னையை அடுத்த கெளரிவாக்கத்தில் உள்ள ராஜலிங்கராஜாவின் வீட்டிலும் சோதனை நடத்தினர். ராஜலிங்கராஜாவை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications