20ம் தேதி அதிமுக அவசர செயற்குழு கூட்டம் - குன்னூரில் நடக்கிறது
சென்னை: அதிமுகவின் அவசர செயற்குழுக் கூட்டம் வருகிற 20ம் தேதி குன்னூரில் கூடுகிறது.
சட்டசபை இடைத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு விட்டது. இதையடுத்து அரசியல் கட்சிகள் சுறுசுறுப்பாகி வருகின்றன.
திமுக சார்பில் போட்டியிடுவோர் விருப்ப மனுக்களை வழங்கலாம் என அக்கட்சி அறிவித்துள்ளது.
இந்த நிலையில் அதிமுகவும் தேர்தலுக்கு ஆயத்தமாகியுள்ளது. அக்கட்சியின் அவசர செயற்குழுக் கூட்டம் வருகிற 20ம் தேதி குன்னூரில் நடைபெறுகிறது.
இதுகுறித்து கொடநாடு எஸ்ட்டேடில் ஓய்வெடுத்து வரும் கட்சிப் பொதுச் செயலாளர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கை:
அ.தி.மு.க. செயற்குழு அவசர கூட்டம் வரும் 20-ந் தேதி மாலை 3 மணிக்கு நீலகிரி மாவட்டம், குன்னூர் உபாசி சாலையில் உள்ள விவேக் ஓட்டலில், கட்சியின் அவைத்தலைவர் இ.மதுசூதனன் தலைமையில் நடைபெறும்.
கட்சியின் செயற்குழு உறுப்பினர்கள் அனைவருக்கும் தனித்தனியே அழைப்பிதழ் அனுப்பி வைக்கப்படும். உறுப்பினர்கள் அனைவரும் தங்களுக்குரிய அழைப்பிதழோடு தவறாமல் வருகை தந்து கட்சியின் செயற்குழு கூட்டத்தில் கலந்து கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன் என்று கேட்டுள்ளார்.
-
“எனது கடைசி ஆசை..” வீடியோவில் பேசிவிட்டு உயிரை மாய்த்துக்கொண்ட அதிமுக தொண்டர்! கட்சியினர் அதிர்ச்சி! -
தொண்டர்களுக்கு மதிப்பு கொடுங்க.. அதிமுக தலைவர்கள் திருத்தி கொள்ளணும்.. செல்லூர் ராஜூ ஒரே போடு! -
“மாவட்ட செயலாளர் தொலைந்து போக வேண்டும்”.. அதிமுகவை விட்டு வெளியேறும் முக்கிய நிர்வாகி விட்ட சாபம்! -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை? -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications