கால்நடை மருத்துவ மாணவர் போராட்டம் வாபஸ்
சென்னை: அமைச்சர் பொங்கலூர் பழனிச்சாமி பேச்சுவார்த்தை நடத்தியதையடுத்து காலநடை மருத்துவப் பயிற்சி மாணவர்கள் தங்களது போராட்டத்தை வாபஸ் பெற்றனர்.
கால்நடை மருத்துவ மாணவர்களுக்கு 6 மாத பயிற்சி காலத்திற்கு ரூ.1,250 உதவித் தொகை வழங்கப்பட்டு வருகிறது. இதை ரூ.7,500 ஆக உயர்த்த வேண்டும், பட்டமேற்படிப்பு பயிலும் மாணவர்களுக்கு மாதம் ரூ.8,000 உதவித் தொகை வழங்க வேண்டும் என்று கோரி கடந்த 13ம் தேதி முதல் சென்னை, நாமக்கல் கால்நடை மருத்துவக் கல்லூரி பயிற்சி டாக்டர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சென்னை வேப்பேரி கால்நடை மருத்துவக் கல்லூரியில் நடந்து வந்த இந்தப் போராட்டத்தையடுத்து நேற்று கல்லூரி, மாணவர் விடுதி ஆகியற்றை அரசு காலவரையின்றி மூடுவதாக அறிவித்தது.
இதனால் சில மாணவர்கள் ஊர்களுக்குப் புறப்பட்டாலும் 100 மாணவிகள் உள்பட 250 பேர் விடுதி வளாகத்திற்குள்ளேயே அமர்ந்து உள்ளிருப்பு போராட்டம் நடத்தி வந்தனர்.
இதைத் தொடர்ந்து, விடுதி முன்பு ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டர். கால்நடை மருத்துவ கல்லூரி டீன் லலிதா ஜான் மாணவர்களிடம் பேச்சு நடத்தியபோதிலும் போராட்டத்தை கைவிட மறுத்து விட்டனர்.
இந் நிலையில், கால்நடைத் துறை அமைச்சர் பொங்கலூர் பழனிச்சாமியை மாணவர்கள் சங்க பிரதிநிதிகள் சந்தித்துப் பேசினர். இதில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து மாணவர் போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. எனினும் இன்று கல்லூரி திறக்கப்படவில்லை. திறக்கும் நாள் பின்னர் அறிவிக்கப்படும்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications