மேட்டூர் நீர் மட்டம் ஒரே நாளில் 5 அடி உயர்வு!
மேட்டூர்: கர்நாடக மாநிலத்தில் பருவமழை தீவிரமடைந்துள்ளதால் அந்த மாநிலத்தில் உள்ள கிருஷ்ணராஜ சாகர், கபினி அணைகள் நிரம்பி காவிரியில் அதிகளவில் தொடர்ந்து நீர் திறந்து விடப்பட்டு வருகிறது. மேட்டூர் அணையின் நீர்மட்டம் ஒரே நாளில் 5 அடி உயர்ந்துள்ளது.
இதனால் மேட்டூர் அணைக்கு வரும் தண்ணீரின் அளவு அதிகரித்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 36,000 கன அடி தண்ணீர் வந்து கொண்டுள்ளதால் அணையின் நீர் மட்டம் ஒரே நாளில் 5 அடி உயர்ந்துள்ளது.
அணையிலிருந்து வினாடிக்கு 1,895 கன அடி தண்ணீர் குடி நீருக்காக திறந்துவிடப்பட்டு வருகிறது.
தற்போது அணையில் 29 டிஎம்சி நீர் உள்ளது. இதன் மொத்தக் கொள்ளவு 93.4 டிஎம்சி ஆகும்.
அணையின் நீர்மட்டம் 90 அடியைத் தாண்டும் போது, டெல்டா பாசனத்துக்கு தண்ணீர் திறந்து விடப்படும். அடுத்த சில நாட்களில் மட்டம் 90 அடியாக உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந் நிலையில் மேட்டூர் அணையின் பாதுகாப்புப் பணியில் துப்பாக்கி ஏந்திய 28 முன்னாள் ராணுவத்தினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
-
தமிழக சட்டசபை செயலாளர் சீனிவாசன் திடீர் ராஜினாமா.. பதவியை எட்டிப்பிடித்த சாந்தி.. பின்னணி என்ன? -
சூட்டோடு சூடா.. அதையும் ஒரு கை பாத்துருவோம்! அடுத்த பரிட்சைக்கு தயாரான விஜய்! வேகமெடுக்கும் பணிகள்! -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
"வரும் சட்டமன்ற கூட்ட தொடரிலேயே ஆணவ கொலைக்கு எதிரான தனி சட்டம்!" அமைச்சர் வன்னியரசு முக்கிய தகவல் -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம்












Click it and Unblock the Notifications