ரயில்கள் மோதி 2 நாட்களில் 2 யானைகள் பலி
Subscribe to Oneindia Tamil
கோவை: கோவை அருகே இரு நாட்களில் ரயில்கள் மோதி இரு யானைகள் பலியாகியுள்ளன.
தமிழகத்தில் இருந்து கேரளத்துக்கு வாளையாறு பகுதி வழியே இரு தண்டவாளங்கள் உள்ளன. அடர்ந்த காட்டுப் பகுதியில் இந்த ரயில் பாதைகள் அமைக்கப்பட்டுள்ளன.
இந்தத் தண்டவாளங்களை தாண்டி கிராமங்களுக்குள் நுழைந்து, பயிர்களை யானைகள் சேதப்படுத்துவது வழக்கமாக நடப்பதாகும்.
இந் நிலையில் வியாழக்கிழமை இரவு கனமழை பெய்து கொண்டிருந்த நிலையில் தண்டவாளத்தை யானைகள் கடந்தன. அப்போது எக்ஸ்பிரஸ் ரயிலில் அடிபட்டு பெண் யானை பலியானது.
அதே போல வெள்ளிக்கிழமை நள்ளிரவில் பெங்களூர்-எர்ணாகுளம் சிறப்பு ரயிலில் அடிபட்டு ஆண் யானை பலியானது.
யானையைப் பார்த்த டிரைவர் அவசர பிரேக்குகள் போட்டு நிறுத்த முயன்றார். அதற்குள் யானையின் தந்தம் ரயில் என்ஜினில் சிக்கிக் கொண்டது. யானை தண்டவாளத்தில் சரிந்து விழுந்து உயிரிழந்தது.












Click it and Unblock the Notifications