மீண்டும் ரத யாத்திரை போகிறார் அத்வானி

இதுகுறித்து அத்வானி கூறுகையில், வழக்கமான ரத யாத்திரை போல இது இருக்காது. போகும் இடமெல்லாம் நான் பொகுக் கூட்டங்களில் பேசப் போவதில்லை. எனது கட்சியின் அடிமட்டத் தொண்டர்களை சந்திக்கப் போகிறேன். தேர்தல் தோல்வி என்பது வழக்கத்திற்கு விரோதமானல்ல என்று அவர்களை சமாதானப்படுத்தப் போகிறேன்.
தோல்வியிலிருந்து எழுந்து அடுத்து வரும் களங்களை சந்திக்கத் தயாராக இருக்க வேண்டும் என தொண்டர்களிடம் கூறப் போகிறேன்.
எனது ரத யாத்திரையின்போது பாஜகவின் அனைத்துப் பிரிவு தலைவர்களையும் சந்தித்து விவாதிக்கப் போகிறேன். நாம் அனைவரும் ஒன்றை நினைவில் கொள்ள வேண்டும். காங்கிரஸ் கட்சியின் ஏகாதிபத்தியத்தை பாஜக வீழ்த்தியுள்ளது, இந்தியாவில் இரு முனை அரசியலை உருவாக்கியுள்ளது என்பதை அவர்களிடம் எடுத்துரைக்கப் போகிறேன்.
இப்போது நமக்குக் கிடைத்திருப்பது மிகப் பெரிய தோல்வி அல்ல. எதிர்பார்த்த ரிசல்ட் நமக்குக் கிடைக்கவில்லை அவ்வளவுதான் என்றார் அத்வானி.


Click it and Unblock the Notifications
