மும்பை பயணத்தை முடித்துக் கொண்டு டெல்லி வந்தார் ஹில்லாரி

Subscribe to Oneindia Tamil

Hillary Clinton
மும்பை: தனது மும்பை பயணத்தை முடித்துக் கொண்டு இன்று பிற்பகல் டெல்லி வந்து சேர்ந்தார் அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஹில்லாரி கிளிண்டன்.

36 மணி நேரத்தை மும்பையில் கழித்த ஹில்லாரி இன்று காலை அங்கிருந்து கிளம்பி டெல்லி வந்து சேர்ந்தார். அவரை விமான நிலையத்தில் அமெரிக்காவுக்கான இந்திய தூதர் மீரா சங்கர், அமெரிக்காவுக்கான மத்திய வெளியுறவு அமைச்சக இணைச் செயலாளர் காயத்ரி குமார் ஆகியோர் வரவேற்றனர்.

டெல்லி பயணத்தின்போது, பிரதமர் மன்மோகன் சிங், வெளியுறவு அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா, எதிர்க்கட்சித் தலைவர் அத்வானி உள்ளிட்ட தலைவர்களை சந்திக்கிறார் ஹி்ல்லாரி.

மேலும் விண்வெளித்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகள் தொடர்பான ஒப்பந்தங்களிலும் இரு நாடுகளின் தலைவர்களும் கையெழுத்திடவுள்ளனர்.

டெல்லி வந்த ஹில்லாரி பின்னர் அங்கிருந்து கர்கான் நகருக்குப் புறப்பட்டுச் சென்றார். அங்குள்ள ஐடிசி பசுமை மைய கட்டத்தை அவர் பார்வையிடுகிறார். அங்கு புவி வெப்ப மாற்றம் குறித்து உரை நிகழ்த்துகிறார்.

கர்கான் பயணத்தை முடித்துக் கொண்டு டெல்லியில் உள்ள தேசிய விவசாய அறிவியல் மையத்திற்குச் செல்கிறார்.

இன்று மாலை ஐக்கிய முற்போக்குக் கூட்டணித் தலைவர் சோனியா காந்தியை சந்திக்கிறார் ஹில்லாரி.

நாளை பிற்பகல் பிரதமர் மன்மோகன் சிங்கையும், பின்னர் வெளியுறவு அமைச்சர் கிருஷ்ணாவையும் சந்திக்கிறார் ஹி்ல்லாரி.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+