உத்தரகாண்ட் மாநில ஆளுநராக மார்கரெட் ஆல்வா நியமனம்

நேற்று மாலை 7 மாநில ஆளுநர்கள் நியமனத்தை குடியரசுத் தலைவர் மாளிகை வெளியிட்டது.
புதுச்சேரிக்கு இக்பால் சிங்..
புதுச்சேரி யூனியன் பிரதேசத்தின் துணை நிலை ஆளுநராக இக்பால் சிங் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் மூத்த காங்கிரஸ் தலைவர் ஆவார்.
அதன்படி உத்தரகாண்ட் மாநில ஆளுநராக இருந்து வந்த பி.எல்.ஜோஷி, உ.பி. மாநில ஆளுநராக மாற்றப்பட்டார்.
உ.பி. மாநில ஆளுநராக இருந்து வந்த டி.வி.ராஜேஷ்வர் பதவியிலிருந்து ஓய்வு பெற்றார்.
உத்தரகாண்டுக்கு ஆல்வா..
மூத்த காங்கிரஸ் தலைவர் மார்கரெட் ஆல்வா, உத்தரகாண்ட் மாநில ஆளுநராக அறிவிக்கப்பட்டுள்ளார்.
கர்நாடக மாநில சட்டசபைத் தேர்தலின்போது காங்கிரஸ் தலைவர்கள் பணம் வாங்கிக் கொண்டு சீட் தந்தார்கள் என்று கூறி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியவர் மார்கரெட் ஆல்வா. அவருக்கு தற்போது ஆளுநர் பதவியைக் கொடுத்துள்ளனர்.
முன்னாள் மத்திய அமைச்சர் ஜெகன்னாத் பஹாடியா ஹரியானா மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார். இவரும் மூத்த காங்கிரஸ் தலைவர்தான். தற்போது அப்பொறுப்பில் உள்ள ஏ.ஆர்.கித்வாய் பதவியிலிருந்து ஓய்வு பெறுகிறார்.
ஜார்க்கண்ட் மாநில ஆளுநர் சையத் சிப்தே ரஸி, அஸ்ஸாம் மாநில ஆளுநராக மாற்றப்பட்டுள்ளார். இவர் வரும் டிசம்பர் மாதம் வரை இப்பதவியில் இருப்பார். பின்னர் ஓய்வு பெறுவார்.
ஜார்க்கண்ட் ஆளுநராக தற்போது நாகாலாந்து மாநில ஆளுநராக உள்ள சங்கரநாராயணன் நியமிக்கப்பட்டுள்ளார்.
குஜராத்துக்கு தேவேந்திர நாத் திவிவேதி...
குஜராத் மாநில ஆளுநர் நவல் கிஷோர் சர்மா பதவியிலிருந்து ஓய்வு பெறுவதால், அவருக்குப் பதில் தேவேந்திர நாத் திவிவேதி நியமிக்கப்பட்டுள்ளார்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
கனவுகள் தகர்ந்தன! மாணவர்களால் மறக்க முடியாத மே மாதம்! 24 லட்சம் மாணவர்களை பாதித்த தேர்வு குளறுபடிகள் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்!












Click it and Unblock the Notifications