ராணுவ ஆளெடுப்பில் வன்முறை - துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் - கூட்ட நெரிசலில் ஒருவர் பலி

உ.பி. மாநிலம் சந்தாலி நகரில் ராணுவத்திற்கு ஆளெடுக்கும் முகாம் நடைபெற்றது. இதையடுத்து அங்குள்ள மகேந்திரே பாலிடெக்னிக் கல்லூரியில், ஆயிரக்கணக்கான இளைஞர்கள் திரண்டு வந்தனர்.
இவர்களில் பெரும்பாலானவர்கள் பீகார் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் ஆவர். அப்போது கூட்டம் அதிகமாக இருந்ததால் கூட்டத்தினரை அமைதிப்படுத்த ராணுவத்தினர் முயன்றனர். ஆனால் முடியவில்லை.
இதையடுத்து திடீரென ராணுவத்தினர் துப்பாக்கியால் சுட்டுள்ளனர். அதில் சிக்கி ஒரு இளைஞர் பரிதாபமாக உயிரிழந்தார்.
இதனால் அங்கிருந்த இளைஞர்கள் மிரண்டு ஓடினர். அப்போது கூட்ட நெரிசலில் சிக்கி ஒருவர் உயிரிழந்தார். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
ஏராளமான பேர் படுகாயமடைந்தனர். அனைவரும் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர்.
கொந்தளித்த இளைஞர்கள் கயா - முகல்சராய் சாலையில் குவிந்தனர். அப்பகுதியில் உள்ள ரயில் பாதையை மறித்து போராட்டத்தில் குதித்தனர். மேலும், சந்தாலி நிலையத்தில் ஒரு ரயில்வே கேபினையும் தீவைத்து எரித்தனர். ரயில் நிலையத்தையும் சூறையாடினர்.
இதனால் ரயில்கள் ஆங்காங்கு நிறுத்தப்பட்டன. பல தொலை தூர ரயில்கள் நடுவழியில் நிறுத்தப்பட்டதால் பயணிகள் பெரும் பாதிப்படைந்தனர்.
இந்த சம்பவம் குறித்து உ.பி. மாநில அமைச்சரவை செயலாளர் சசாங்க் சேகர் சிங் கூறுகையில், ராணுவத்தினர் சுட்டதில் ஒருவர் உயிரிழந்துள்ளார். இதுகுறித்து நீதி விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது என்றார்.
துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் இறந்தாலும் நெரிசலில் சிக்கி 5 பேர் வரை உயிரிழந்ததாக உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் கூறுகின்றன. இருப்பினும் இதை அரசுத் தரப்பி்ல் உறுதி செய்யவில்லை.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
கனவுகள் தகர்ந்தன! மாணவர்களால் மறக்க முடியாத மே மாதம்! 24 லட்சம் மாணவர்களை பாதித்த தேர்வு குளறுபடிகள் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்!












Click it and Unblock the Notifications