தஞ்சை பிரகதீஸ்வரர் கோவில் அகழியில் குண்டு வெடிப்பு
தஞ்சாவூர்: தஞ்சையில் உள்ள பெரிய கோவில் எனப்படும் பிரகதீஸ்வரர் கோவில் அகழியில் குண்டு வெடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
தஞ்சைப் பெரிய கோவில் முன் சுமார் 40 அடி ஆழம் கொண்ட அகழி உள்ளது. கோயில் பாதுகாப்பிற்காக வெட்டப்பட்ட இந்த அகழி, கழிவுநீர் தேங்கி, முள் செடிகள் வளர்ந்து மண்டிக் கிடக்கிறது.
இந்த அகழியில் சனிக்கிழமை இரவு பலத்த சப்தத்துடன் குண்டுவெடித்தது. இதுகுறித்து தகவல் கிடைத்ததும், தஞ்சாவூர் சரக டிஐஜி அபய்குமார் சிங், மாவட்டக் காவல்துறைக் கண்காணிப்பாளர் செந்தில்வேலன், நகர துணைக் கண்காணிப்பாளர் இளம்பரிதி ஆகியோர் பெரிய கோயிலுக்கு வந்தனர்.
அகழியில் இறங்கி சோதனையிட்டனர். அங்கு முகம் சிதறிய நிலையில் ஒரு நாய் இறந்து கிடந்தது.
வெடிகுண்டு நிபுணர்கள் வெடிபொருளின் துகள்களைச் சேகரித்தனர். ஆனால், எந்த வகையான குண்டு வெடித்தது என்பதைக் கண்டறிய முடியவில்லை.
நாயின் வாய் மற்றும் மார்புப் பகுதிகள் "ஸ்கேன்' எடுக்கப்பட்டு, அங்கிருந்த வெடிபொருளின் துகள்கள் பரிசோதிக்கப்பட்டன.
தஞ்சைக் கோவில் அகழியில் குண்டுவெடித்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications