ஸ்ரீவைகுண்டம் -செல்வராஜ் மனைவி விருப்ப மனு - காங்கிரசார் கலக்கம்
ஸ்ரீவைகுண்டம்: ஸ்ரீவைகுண்டம் தொகுதியில் போட்டியிட மறைந்த எம்.எல்.ஏ செல்வராஜின் மனைவி விருப்பம் தெரிவித்து மனுச் செய்துள்ளதால் சீட் பெற முயற்சி செய்தவர்கள் கலக்கமடைந்துள்ளனர்.
ஸ்ரீவைகுண்டம், தொண்டாமுத்தூர், பக்கூர், கம்பம், இளையன்குடி ஆகிய 5 தொகுதிகளுக்கு அடுத்த மாதம் 18ம் தேதி இடை தேர்தல் நடக்கிறது.
ஸ்ரீவைகுண்டம் தொகுதியில் காங் சார்பில் வெற்றி பெற்ற செல்வராஜ் மாரடைப்பால் மரணமடைந்தார். இந்த தொகுதி மீண்டும் காங்கிரசுக்கே ஓதுக்கப்படும் என்று தெரிகிறது.
இத்தொகுதியில் போட்டியிட தூத்துக்குடி மாவட்ட இளைஞர் காங் தலைவர் விஜயசீலன், பொது செயலாளர் மால்முருகன், மாநில பொது குழு உறுப்பினர் மயிலை பெரியசாமி, சிவபாலன், ஆர்.எஸ்.முத்து, தொழிலதிபர் பொன்.பாண்டியன், வக்கீல் மகேந்திரன் உள்ளிட்டோர் முயற்சி செய்து வருகின்றனர்.
இந்நிலையில் மறைந்த எம்எல்ஏ செல்வராஜின் மனைவி நளினி இத்தொகுதியில் போட்டியிட விருப்பம் தெரிவித்துள்ளார். நேற்று முன்தினம் சென்னை வந்த மத்திய அமைச்சர் ஜீ.கே வாசனிடம் அவர் விருப்ப மனு கொடுத்தார்.
இத்தொகுதியில் நளினி போட்டியிட்டால் அனுதாப ஓட்டுகள் மூலம் காங்கிரஸ் வெற்றி பெற வாய்ப்புள்ளது என்று செல்வராஜீன் ஆதரவாளர்கள் கணிக்கின்றனர்.
நளினி விருப்ப மனு தாக்கல் செய்ததால் ஸ்ரீவைகுண்டத்தில் களமிறங்க முயற்சி மேற்கொண்டு வரும் காங்கிரசின் முக்கிய புள்ளிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications