சம்பா சாகுபடிக்காக மேட்டூர் அணை ஆக-7ல் திறப்பு
சென்னை: காவிரி டெல்டா பகுதியில் சம்பா சாகுபடிக்காக மேட்டூர் அணை வரும் ஆகஸ்ட் 7ம் தேதி திறக்கப்படும் என்று முதல்வர் கருணாநிதி கூறினார்.
இன்று சட்டசபையில் 110 விதியின் கீழ் அறிக்கையை வாசித்தார் கருணாநிதி. அவர் கூறுகையில்,
கேரளத்திலும் கர்நாடகத்திலும் பெய்து வரும் கன மழை காரணமாக மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு அதிகரித்துள்ளது. கடந்த 14ம் தேதி 60 அடியாக இருந்த மேட்டூர் அணையின் நீர்மட்டம் நேற்று 81 அடியாக உயர்ந்துள்ளது.
அணைக்கு நேற்றிரவு நிலவரப்படி வினாடிக்கு 60,000 கன அடி நீ்ர் வந்து கொண்டுள்ளது. இதே நிலை நீடித்தால் அடுத்த இரு வாரங்களில் நீர் மட்டம் 90 அடியைத் தொட்டுவிடும். இதை மனதில் கொண்டு சம்பா சாகுபடிக்காக மேட்டூர் அணையை ஆகஸ்ட் 7ம் தேதி திறக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதனால் காவிரி டெல்டா விவசாயிகள் சம்பா சாகுபடிக்கான பணிகளை உடனடியாகத் தொடங்குமாறு கேட்டுக் கொள்கிறேன் என்றார்.
வழக்கமாக ஆண்டுதோறும் ஜூன் 12ம் தேதி மேட்டூர் அணை சம்பா சாகுபடிக்காக திற்பபடும். ஆனால், இந்தாண்டு கர்நாடகம் உரிய நேரத்தில் நீரைத் திறந்துவிடாததால் மேட்டூர் அணையில் போதிய நீர் இல்லை. இப்போது கன மழையால் கபினி, கிருஷ்ணராஜ சேகர் அணைகள் நிரம்பிவிட்டதால் வேறு வழியின்றி உபரி நீரை கர்நாடகம் திறந்துவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
மேட்டூர் அணையின் கொள்ளவு 120 அடியாகும். இன்று காலை நிலவரப்படி அணைக்கு 53,000 கன அடி நீர் வந்து கொண்டுள்ளது. அணையின் நீர் மட்டம் 84 அடியை எட்டியுள்ளது.
-
இன்னும் 3 நாள் தான்.. வரப் போகுது தென்மேற்குப் பருவமழை! ஜில்ஜில் கிளைமேட்டுக்கு ரெடியாகுங்க மக்களே! -
கருணை காட்டுவாரா வருண பகவான்.. சென்னை, செங்கல்பட்டில் சட்டென மாறிய வானிலை -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்!












Click it and Unblock the Notifications