குடும்பத்தோடு விஷம் அருந்திய எஸ்ஐ குடும்பம்
திண்டுக்கல்: திண்டுக்கல்லில் குடும்ப பிரச்னை காரணமாக எஸ். ஐ சீனிவாசன் என்பவரின் மனைவி தனது இரு குழந்தைகளுடன் விஷம் குடித்தார்.
திண்டுக்கல் மாவட்டத்தின் பல்வேறு காவல் நிலைங்களில் எஸ்.ஐ- யாக பணியாற்றியவர் சீனிவாசன். இவர் தேனி மாவட்டத்தில் பணியாற்றும் போது, ஒழுங்கு நடவடிக்கை காரணமாக சஸ்பெண்ட் செய்யப் பட்டுள்ளார்.
இந்த நிலையில் திண்டுக்கல் கூட்டுறவு காலனியில் வசித்து வந்த இவரது மனைவி பிலோமினாள் (35), மகள் துர்கா(17), மகன் சூர்யா(6) ஆகியோர் நேற்று விஷம் குடித்தனர்.
இவர்கள் மூன்று பேரும் ஆபத்தான நிலையில் திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இது குறித்து திண்டுக்கல் நகர் வடக்கு போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
போலீசார் விசாரணையில், தனது எதிராலம் குறித்து, தனது தாயார் தவறாக பேசியதால்,மனமுடைந்து இந்த முயற்சியில் ஈடுபட்டதாக பிலோமினாள் வாக்குமூலம் அளித்துள்ளார்.
விபத்து-2 பேர் பலி-21 பேர் காயம்:
திண்டுக்கல் அருகே வேன் மீது லாரி மோதிக் கொண்டதில் பெண் உள்பட இருவர் பலியானார்கள். ஐந்து குழந்தைகள் உட்பட 21 பேர் காயமடைந்தனர்.
கோவை கவுண்டம்பாளையத்தில் இருந்து ஏழு ஆண்கள், பத்து பெண்கள், 5 குழந்தைகள் ராமேஸ்வரத்தில் சுவாமி தரிசனம் செய்ய சுவராஜ் மஸ்தா வேனில்
சென்றனர்.
அந்த வேனின் டீசல் டாங்க்கில் கோளாறு ஏற்பட்டதால் திண்டுக்கல் ராமையன்பட்டி அருகே வேனை ஒர்க் ஷாப்பிற்கு டிரைவர் சந்திரசேகரன் (65) கொண்டு சென்றார்.
அப்போது திண்டுக்கல்லில் இருந்து கேரளாவிற்கு மீன் ஏற்றி சென்ற லாரி மின்னல் வேகத்தில் மோதியது. இதில் வேனில் பயணம் செய்த கோவை சிங்காநல்லூரை சேர்ந்த லிங்கம்மாள் (55), சவுந்திரராஜன் (52) ஆகியோர் மருத்துவமனைக்குக் கொண்டு வரும் வழியில் இறந்தனர்.
இதே பகுதியை சேர்ந்த ஆனந்தக்குமார் (32), விஜயலட்சுமி (25), பொன்னுச்சாமி (55), நவீன்குமார்(10), கிஷார் (25) உட்பட 21 பேர் படு காயமடைந்தனர்.
இதில் பிரியதர்ஷினி(2), கவிதர்ஷினி (1 ) உள்பட ஐந்து குழந்தைகளை திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர் .
இவர்களை கலெக்டர் வள்ளலார், எஸ்.பி. சின்னசாமி ஆகியோர் பார்வையிட்டு ஆறுதல் கூறினர்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications