மீண்டும் டெல்லி மெட்ரோ திட்டத்தில் விபத்து - இரும்பு தூண் விழுந்து தொழிலாளி பலி
டெல்லி: டெல்லி மெட்ரோ ரயில் திட்டப் பணிகள் மீண்டும் ஒரு விபத்தை சந்தித்துள்ளன. இன்று அதிகாலையில், இரும்பு தூண் ஒன்று விழுந்ததில் 22 வயதான தொழிலாளர் பலியானார்.
மேற்கு டெல்லியில், பஞ்சாபி பாக் என்ற இடத்தில் உள்ள ராம் பாக் என்ற இடத்தில், காலை 6 மணியளவில் இந்த விபத்து நடந்தது.
இரும்புத் தூண் ஒன்றை கிரேன் மூலம் மேலே கொண்டு சென்றபோது திடீரென கிரேனின் சங்கிலி துண்டிக்கப்பட்டது. இதனால் அந்த இரும்புத் தூண் அப்படியே கீழே விழுந்ததில் 22 வயதான விக்கி சிங் என்பவர் சிக்கிப் படுகாயமடைந்தார்.
உயிருக்கு ஆபத்தான நிலையில் அவரை மகாராஜா அக்ரசேன் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஆனால் அவர் இறந்து விட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.
கடந்த 10 நாட்களில் மெட்ரோ சந்தித்துள்ள 3வது விபத்து இது. ஜூலை 12ம் தேதி பாலம் இடிந்து விழுந்ததில் 6 பேர் உயிரிழந்தனர்.
அதற்கு அடுத்த நாள் இடிபாடுகளை அகற்றிக் கொண்டிருந்தபோது கிரேன்கள் சரிந்து விழுந்ததில் ஐந்து பேர் காயமடைந்தனர் என்பது நினைவிருக்கலாம்.
-
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
நெல்லை அருகே லாரி மீது மோதி சிதறிய ஆம்னி பேருந்து.. 20 பேர் படுகாயம்! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications