குஜராத் மாநகராட்சி தேர்தலில் பாஜக படுதோல்வி
ராஜ்கோட்: குஜராத் மாநிலம் ஜுனாகட் மாநகராட்சித் தேர்தலில் பாஜக படுதோல்வி அடைந்துள்ளது. இது முதல்வர் நரேந்திர மோடிக்கு ஏற்பட்ட மிகப் பெரும் பின்னடைவாகக் கருதப்படுகிறது. மாநிலத்தில் காணாமல் போயிருந்த காங்கிரஸ் கட்சி மிக அதிக இடங்களைக் கைப்பற்றி மாநகராட்சியைப் பிடித்துள்ளது.
ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இந்தத் தேர்தலில் நேற்று வாக்குகள் எண்ணப்பட்டன. 51 வார்டுகளைக் கொண்ட இந்த மாநகராட்சியில் 26 இடங்களை காங்கிரஸ் கட்சியும், 21 இடங்களை பாஜகவும், 3 இடங்களை பகுஜன் சமாஜ் கட்சியும், ஒரு இடத்திலும் சுயேச்சையும் வெற்றி பெற்றுள்ளனர்.
மக்களவைத் தேர்தலில் எதிர்பார்த்த அளவுக்கு மாபெரும் வெற்றி கிடைக்காத நிலையில் இந்தத் தேர்தலை பாஜக கெளரவப் பிரச்னையாக எடுத்துக்கொண்டு களத்தில் இறங்கியது. நரேந்திர மோடியே பிரச்சாரத்திலும் ஈடுபட்டார்.
2004ம் ஆண்டு நட்த மாநகராட்சித் தேர்தலில் பாஜக 35 இடங்களைப் பிடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
குஜராத்தின் முக்கிய நகர்ப் பகுதியான இங்கு நரேந்திர மோடிக்கு பெரும் செல்வாக்கு இருந்தது. இப்போது அங்கு பெரும் சரிவு ஏற்பட்டு்ள்ளது.
-
நம்ப வச்சு கழுத்தறுத்து.. டெல்லிக்கே சென்று சாதித்த நயினார்! அண்ணாமலை ஆங்கிரிக்கு இது தான் காரணம்! -
அண்ணாமலை மாதிரி இனி ஒருத்தர் வர மாட்டார்.. பாஜகவிலிருந்து விலகியதால்.. கலங்கிய ஆர்எஸ்எஸ்! -
கொங்கு மண்டல கணக்கு.. எடப்பாடி மீது குறையும் நம்பிக்கை.. அண்ணாமலை புதிய ரூட் எடுக்கும் பின்னணி -
அடிச்சு ஆடுங்க ஜி.. இனி உங்க காலம்! சாமியாரைப் பார்த்து ஐடியா கேட்ட அண்ணாமலை.! இது தான் காரணமா? -
"வீட்டு வேலை செய்த பெண் டூ மாண்புமிகு அமைச்சர்.." மேற்கு வங்கத்தில் பாஜக செய்த சம்பவம்! -
பாஜக கொடியை நீக்கிய அண்ணாமலை.. உருவாகும் 'மக்கள் சக்தி இயக்கம்'.. காரில் வரும் புதிய கொடி! -
பாஜகவில் இருந்து விலகினார் அண்ணாமலை! நிதினிடம் தமிழக பாஜக மீது அடுக்கடுக்கான புகார் -
1000% கன்ஃபார்ம்.. புதிய கட்சி ஆரம்பிக்கும் அண்ணாமலை! அடுத்த வாரம் இருக்கு கச்சேரி! பரபர பாஜக! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
நேரம் ஒதுக்காத அமித்ஷா.. கிரீன் சிக்னல் கொடுக்காத பாஜக தலைமை! டெல்லியில் காத்திருக்கும் அண்ணாமலை -
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்? -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்!












Click it and Unblock the Notifications