என்னை தண்டியுங்கள், தூக்கில் போடுங்கள்-கசாப்
மும்பை: ஒப்புதல் வாக்குமூலம் அளிக்குமாறு யாரும் என்னை வற்புறுத்தவில்லை. நான் எதற்காகவும் பொய் சொல்லவில்லை. நான் அப்படி கூறியதாக நினைத்தால் என்னைத் தண்டியுங்கள், தூக்கில் போடுங்கள் என்று கூறியுள்ளான் கசாப்.
மும்பை தீவிரவாதத் தாக்குதல் வழக்கு இன்று மீண்டும் தனி கோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. அப்போது கசாப் கூறுகையில், எந்தவித நெருக்கடியாலும் நான் ஒப்புத் வாக்குமூலம் தரவில்லை. அப்படி கோர்ட் நினைத்தால் என்னை உடனே தூக்கில் போட்டு விடுங்கள்.
நான் செய்த தவறுக்காக என்னைத் தண்டியுங்கள். எந்தவித நிர்ப்பந்தமும் இல்லாமல்தான் நான் ஒப்புத்ல வாக்குமூலம் அளித்தேன். தப்பிக்க வேண்டும் என்பதற்காக நான் ஒப்புதல் வாக்குமூலம் தரவில்லை என்றான் கசாப்.
இஸ்மாயில் மீது பழி போடும் கசாப்..
இதற்கிடையே, காமா மருத்துவமனை அருகே கர்கரே உள்ளிட்ட 3 மும்பை போலீஸ் அதிகாரிகளை தான் சுட்டுக் கொல்லவில்லை என்றும் தன்னுடன் இருந்த அபு இஸ்மாயில்தான் சுட்டார் என்றும் கசாப் கூறியுள்ளான்.
இதுதொடர்பாக அவன் அளித்துள்ள ஒப்புதல் வாக்குமூலத்தில் இதைத் தெரிவித்துள்ளான்.
அந்தப் பகுதி தற்போது கசிந்துள்ளது. அதில், நானும் அபு இஸ்மாயிலும் காமா மருத்துவமனை அருகே, எங்களை நோக்கி ஒரு போலீஸ் ஜீப் வருவதைப் பார்த்தோம்.
மேலும் ஜீப்பில் இருந்தவர்கள் எங்களை நோக்கி சுட ஆரம்பித்தனர். அப்போது இஸ்மாயில், ஜீப்பை நோக்கி சுட்டான். அப்போது எனது வலது தோல்பட்டையி, வலது முழங்கை, இடது மணிக்கட்டு ஆகியவற்றில் காயம் ஏற்பட்டது.
இதையடுத்து நான் துப்பாக்கியுடன் கீழே விழுந்து விட்டேன்.
ஆனால் ஜீப்பை நோக்கி முன்னேறிய இஸ்மாயில் அதில் இருந்தவர்கள் மீது தொடர்ந்து துப்பாக்கியால் சரமாரியாக சுட்டான்.
பின்னர் கீழே விழுந்த நான் சுதாரித்து எழுந்து எனது துப்பாக்கியுடன் ஜீப் அருகே சென்றேன் என்று கூறியுள்ளான்.
இதன் மூலம் செத்துப் போன இஸ்மாயில் மீது பழியைப் போட்டு தான் தப்பிக்க முயல்வதாக கசாப் குறித்து சந்தேகம் எழுந்துள்ளது.
-
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட்












Click it and Unblock the Notifications