சட்டசபை-ஒரே நாளில் 30 சட்டங்கள்
சென்னை: சட்டசபையில் நேற்று ஒரே நாளில் 30 சட்ட மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டன. இதையடுத்து தேதி குறிப்பிடப்படாமல் பேரவை ஒத்திவைக்கப்பட்டது.
சட்டசபையின் 11வது கூட்டத் தொடர் ஜூன் 17ம் தேதி தொடங்கியது. ஜூலை 21ம் தேதியான நேற்று முடிவடைந்தது.
கடைசி நாளான நேற்று சட்டசபை கூட்டம் பிற்பகலிலும் நடந்தது.
அப்போது திருமணங்கள் பதிவு சட்டம், ஜல்லிக்கட்டை முறைப்படுத்த சட்டம், பள்ளி கட்டணங்களை முறைப்படுத்தும் சட்டம் என மொத்தம் 31 சட்டங்கள் கொண்டு வரப்பட்டன. இதில் காவல்துறை சட்டம் தவிர மற்ற 30 சட்டங்களும் நிறைவேற்றப்பட்டன.
பின்னர் தேதி குறிப்பிடப்படாமல் பேரவை ஒத்திவைக்கப்பட்டது. இதற்கான தீர்மானத்தை துணை முதல்வர் ஸ்டாலின் கொண்டு வர குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது.
இந்தக் கூட்டத் தொடரில் பால் உற்பத்தியாளர்கள், பயிற்சி மருத்துவர்கள், சத்துணவுப் பணியாளர்கள் ஆகியோரின் போராட்டங்கள் குறித்து விவாதிக்கப்பட்டன.
முதல்வர் கருணாநிதியின் துறைகள் மீதான மானியக் கோரிக்கைகளுக்கு துணை முதல்வர் ஸ்டாலினும், நிதியமைச்சர் க.அன்பழகனும் பதில் அளித்தனர்.
பல்வேறு பிரச்னைகள் காரணமாக அதிமுக, மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் பேரவையில் இருந்து வெவ்வேறு சம்பவங்களில் வெளியேற்றப்பட்டனர். பாமக, மதிமுக ஆகியவை பலமுறை வெளிநடப்பு செய்தன.
மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் உறுப்பினர்கள் மீது உரிமை மீறல் பிரச்னை கொண்டு வரப்பட்டு, வாபஸ் பெறப்பட்டது.
இந்தக் கூட்டத் தொடரில் ஒரு நாள் கூட சட்டசபை நிகழ்ச்சிகளில் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
-
அதிமுகவில் தவெக ’துரந்தர்’.. மாமியார் மூலம் இலையை கருக வைத்த ’அர்ஜுனா’ வியூகம்! பலே பாலிடிக்ஸ் விஜய் -
எடப்பாடி பழனிசாமி இந்த அதிர்ச்சியை தாங்குவாரா? மேலும் 3 அதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா? -
வாழை மரமா? ஆல மரமா? அந்தரத்தில் தொங்குதே அதிமுக! எடப்பாடிக்கு இன்னும் ஒரே ஒரு சான்ஸ் இருக்கு! என்ன? -
வேரில் வெந்நீர் ஊற்றும் விஜய்.. கொஞ்சம் கொஞ்சமாய் கருகுதே இரட்டை இலை! உஷாராவது எடப்பாடிக்கு நல்லது! -
Gen Z DMK Meetup.. விஜய் ஏற்படுத்திய ‘இன்ஸ்டா’ புயல்! இளைய தலைமுறையை நெருங்கும் திமுக! கைகொடுக்குமா? -
அதிமுகவில் அடுத்தடுத்து 2 விக்கெட்.. மாஜி எம்எல்ஏக்கள் 2 பேர் தவெகவில் ஐக்கியம்.. யார் இவர்கள்? -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
விஜய் இஸ் இஞ்சூரியஸ் டூ இரட்டை இலை.. அதிமுகவின் ஒவ்வொரு செங்கலையும் பிரிக்கும் தவெக! எடப்பாடி ஷாக்! -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
Cockroach Party: ஆதவ் அர்ஜுனா சேராத ஒரே கட்சி கரப்பான்பூச்சி ஜனதாதான்! அதிமுக எம்பி இன்பதுரை கிண்டல் -
“PR பில்டப்லாம் போதும்.. முதல்ல மக்களோட பாதுகாப்பையும் கொஞ்சம் பாருங்க விஜய் சார்..” அதிமுக காட்டம்!












Click it and Unblock the Notifications