காந்தி சிலைக்கு கறுப்பு துணி-வாயில் நோட்டு!
திண்டிவனம்: திண்டிவனத்தி்ல் காந்தி சிலையின் கண்கள் மீது கறுப்பு-சிவப்பு துணி கட்டப்பட்டு, வாயில் 10 ரூபாய் ஒட்டப்பட்டு அவமரியாதை செய்யப்பட்டிருந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
திண்டிவனம் நகராட்சி அலுவலகம் எதிரே மகாத்மா காந்தி சிலை உள்ளது. இன்று காலை இந்த சிலையின் கண்களி்ல் கறுப்பு-சிவப்பு துணி கட்டப்பட்டு, சிலையி்ன் வாயில் 10 ரூபாய் நோட்டு ஒட்டப்பட்டிருந்தது.
அதன் அருகே வைக்கப்பட்டிருந்த ஒரு பேனரில் காங்கிரஸ் தலைவர் சோனியா நோட்டுக் குவியலில் அமர்ந்திருப்பது போலவும் முதல்வர் கருணாநிதி மற்றும் பலர் வரிசையில் சென்று அந்தப் பணத்தைப் பெறுவது போலவும் படம் ஒட்டப்பட்டிருந்தது.
மேலும் அதன் அருகே அருகே ''ஜனநாயக நாட்டில் பணநாயகத் தேர்தல். காந்தி போட்ட நோட்டுக்கு வரப் போகிறது தேர்தல். புறக்கணிப்போம்.. புறக்கணிப்போம்'' என்றும் எழுதப்பட்டிருந்தது.
போலீசார் விரைந்து வந்து கறுப்பு, சிவப்பு துணியை அகற்றி, மகாத்மாவின் சிலையில் ஒட்டப்பட்ட 10 ரூபாயையும் அகற்றி, பேனரையும் அகற்றினர்.
தகவல் அறிந்ததும் காங்கிரசார் அங்கு திரண்டு வந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை போலீசார் கலைந்து போகச் செய்தனர்.
இந்தச் செயலை செய்தவர்கள் குறித்து விசாரணை நடந்து வருகிறது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications