3 ஆண்டில் ரூ.34000 உயர்ந்த எம்எல்ஏக்கள் ஊதியம்
சென்னை: தமிழகத்தில் எம்எல்ஏக்களின் சம்பளம் கடந்த 3 ஆண்டுகளில் ரூ.34,000 உயர்த்தப்பட்டுள்ளது.
2005 ஏப்ரலில் அதிமுக ஆட்சியில் எம்எல்ஏக்களின் சம்பளம், படிகள் ஆகியவற்றை ரூ.12,000லிருந்து ரூ.16,000 ஆக உயர்த்தினார் ஜெயலலிதா.
2006ல் திமுக ஆட்சிக்கு வந்த பின் செப்டம்பரில் சம்பளம், படிகள் ஆகியவற்றை ரூ.20,000 ஆக உயர்த்தினார் முதல்வர் கருணாநிதி. இது 2007ல் ரூ.25,000 ஆக உயர்த்தப்பட்டது.
2008 மே மாதத்தில் எம்எல்ஏக்களின் மொத்த ஊதியம் மீண்டும் உயர்த்தப்பட்டு ரூ.30,000 ஆனது.
2009ம் ஆண்டு பிப்ரவரியில் இது ரூ.45,000 ஆக உயர்த்தப்பட்டது.
இந் நிலையில் நேற்று மீண்டும் ரூ.5,000 உயர்த்தப்பட்டு இப்போது எம்எல்ஏக்களின் மொத்த ஊதியம் ரூ.50,000 ஆகிவிட்டது.
இந்த ஊதிய உயர்வு ஏப்ரல் 1ம் தேதி முதல் கணக்கிட்டு வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டள்ளது.
இதனால், அரசுக்கு ஆண்டுக்கு ரூ. 1.2 கோடி கூடுதல் செலவாகும்.
அதே போல முன்னாள் எம்எல்ஏக்களுக்கு இப்போது அரசு மருத்துவமனைகளில் இலவச சிகிச்சை வழங்கப்படுகிறது. அதேபோல முன்னாள் எம்எல்ஏக்களின் வாரிசுகள், மறைந்த எம்எல்ஏக்களின் வாரிசுதாரர்களுக்கும் அரசு மருத்துவமனையில் இலவச சிகிச்சை வழங்கப்படும் என்றும் அரசு அறிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications