கான்டினென்டல் மன்னிப்பு கேட்கவில்லை-கலாம்

டெல்லியிலிருந்து மூன்று மாதங்களுக்கு முன்பு நியூயார்க்குக்கு கலாம் பயணம் மேற்கொண்டபோது பாதுகாப்பு சோதனை என்ற பெயரில் கலாமை அசிங்கப்படுத்தியது அமெரிக்காவின் கான்டினென்டல் ஏர்லைன்ஸ்.
இதுகுறித்து அரசு கமுக்கமாக இருந்து வந்தது. ஆனால் கலாம் அவமானப்படுத்தப்பட்ட தகவல் கசிந்ததும் நாடே அதிர்ந்தது. நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் போர்க்கொடி உயர்த்தினர்.
இதையடுத்து சுதாரித்த மத்திய அரசு இந்த சம்பவம் மன்னிக்க முடியாதது. இதுதொடர்பாக விமான நிறுவனத்திற்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது என்று தெரிவித்தது.
இதையடுத்து சப்பைக் கட்டு விளக்கம் அளித்த கான்டினென்டல், பிரச்சினை பெரிதானதும், கலாமுக்கு நேர்ந்தது குறித்து மன்னிப்பு கேட்பதாக அறிவித்தது.
ஆனால் வெறுமனே சொல்லியதோடு நின்று விட்டது கான்டினென்டல் என்று தெரிய வந்துள்ளது. காரணம், மன்னிப்பு கேட்டு இதுவரை கலாமை அந்த நிறுவனத்தினர் தொடர்பு கொள்ளவில்லை, கடிதம் எதையும் அனுப்பவில்லை.
இதுகுறித்து கலாமிடம் கேட்கப்பட்டபோது, எனக்கு இதுவரை எந்த மன்னிப்பும் வரவில்லை என்று கூறினார் கலாம்.
இந்த சம்பவத்தை அவமானமாக உணருகிறீர்களா என்று கேட்டபோது, இதுகுறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்பட்டுள்ளது என்றார் கலாம்.
கான்டினென்டல் சமாளிப்பு..
இந் நிலையில் கான்டினென்டல் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், கலாம் டெல்லியில் இல்லாததால் அவரிடம் மன்னிப்பு கேட்க முடியவில்லை. அவர் டெல்லி திரும்பியதும் எங்களது அதிகாரிகள் நேரடியாக சந்தித்து மன்னிப்பு கேட்போம் என்று கூறப்பட்டுள்ளது.
-
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி












Click it and Unblock the Notifications