ரூ. 2500 கோடி அரிசி ஊழல்!-சிக்கலில் மத்திய அரசு

இதுதொடர்பாக அவுட்லுக் இதழ் செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது...
கடந்த 2008ம் ஆண்டு முதல் 21 ஆப்பிரிக்க நாடுகளுக்கு இந்தியாவின் பாஸ்மதி அல்லாத அரிசி ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. உண்மையில் இந்த அரிசியை ஏற்றுமதி செய்ய மத்திய அரசு தடை விதித்துள்ளது. ஆனால் அதையும் மீறி அரிசி ஏற்றுமதி நடந்துள்ளது.
மனிதாபிமான அடிப்படையில், தனியார் ஏற்றுமதியாளர்களுக்கு அரிசி ஏற்றுமதி செய்ய மத்திய அரசு அனுமதி அளித்தது. இந்த அனுமதியை வர்த்தகத் துறையும், மத்திய உணவு அமைச்சகமும் வழங்கியுள்ளன.
இந்த அரிசி அனைத்தும் தென் ஆப்பிரிக்கா, நைஜீரியா உள்ளிட்ட 21 ஆப்பிரிக்க நாடுகளுக்கு ஏற்றுமதியாகியுள்ளன.
இந்த அரிசி ஏற்றுமதியை, இந்திய உணவு கார்ப்பரேஷன் மூலமாக மேற்கொள்ளாமல், தனியார் நிறுவனம் ஒன்றின் மூலம் மேற்கொள்ள மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. இதனால் அந்த நிறுவனம் கொளுத்த லாபத்தை சந்தித்துள்ளது. மத்திய அரசுக்கு பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
சியாரோ லியோனுக்கு அனுப்பப்பட்ட அரிசி, ஸ்விஸ் நாட்டைச் நோவல் என்ற நிறுவனம் பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. அதாவது சியாரோ லியோன் மூலம் சுவிஸ் நாட்டுக்கு இந்த அரிசி போயுள்ளது.
அதேபோல அரிசி விளைச்சல் அமோகமாக நடந்துள்ள நைஜீரியா நாட்டுக்கு 1 லட்சத்து 17 ஆயிரம் டன் அரிசியை அனுப்பியுள்ளனர். அந்த அரிசியை வேண்டாம் என்று நைஜீரியா கூறியுள்ளது.
இதையடுத்து அங்கிருந்து தென் ஆப்பிரிக்காவுக்கு அந்த அரிசி திருப்பி விடப்பட்டுள்ளது.
இது அப்பட்டமான அரிசி கடத்தலாகும். அதாவது ஆப்பிரிக்க நாடுகளுக்கு அரிசியை அனுப்பி அந்த அரிசியை அங்கிருந்து வேறு நாடுகளுக்கு கொண்டு போயுள்ளனர். சர்வதேச சந்தையில் மிகப் பெரிய விலை வைத்து விற்றுள்ளனர் என்று கூறியுள்ளார் டி.ராஜா.
இந்தப் புகார் குறித்து விவசாயத்துறை அமைச்சர் சரத் பவார் கருத்து கூற மறுத்துள்ளார்.
மேலும், அப்போதைய வர்த்தகத்துறை அமைச்சர் கமல்நாத்தும் பதிலளிக்க மறுத்துள்ளார்.
விரைவில் இந்த அரிசி விவகாரம், ஸ்பெக்ட்ரம் ஊழலை விட மிகப் பெரிய அளவில் வெடித்து மத்திய அரசுக்கு சங்கடத்தை ஏற்படுத்தும் எனத் தெரிகிறது.
-
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி












Click it and Unblock the Notifications