'அய்யாதுரை' ஆக இருந்த மு.க.ஸ்டாலின்!

சென்னை மாநகராட்சி மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளுக்கு தமிழில் பெயர் சூட்டினால் தங்க மோதிரம் பரிசு வழங்கும் திட்டம் இன்று தொடங்கியது.
சென்னை மாநகராட்சி அறிவித்துள்ள இந்தத் திட்டத்தை துணை முதல்வர் ஸ்டாலின் துவக்கி வைத்தார்.
முதல்வர் கருணாநிதி பிறந்த நாளான ஜூன் 3ம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ள இத் திட்டத்தின்படி அன்று முதல் பிறந்து தமிழில் பெயர் சூட்டப்பட்ட 250 குழந்தைகளுக்கு தங்க மோதிரங்களை ஸ்டாலின் வழங்கினார்.
பின்னர் ஸ்டாலின் பேசுகையில்,
இன்று 250 குழந்தைகளுக்கு தங்க மோதிரம் வழங்கப்படுகிறது.
ஒரு மோதிரத்தின் விலை ரூ.1,468 வீதம் ரூ.3.67 லட்சம் மதிப்பில் மோதிரங்கள் வழங்கப்பட்டுள்ளன. வரும் காலங்களில் அனைத்து மண்டலங்களிலும் இந்த திட்டம் செயல்படுத்தப்படும்.
தமிழ் பெயர்களை ஆய்வு செய்ய தமிழ் ஆசிரியர்கள் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. அண்டை மாநிலங்களில் தாய்மொழி உணர்வோடு பெயர்கள் சூட்டப்படுகின்றன. தமிழ்நாட்டில் முழு அளவில் அவ்வாறு சூட்டுவதில்லை. இதை ஊக்கப்படுத்துவதற்காக இத்திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.
நான் திருமண நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வாழ்த்தும்போது குழந்தைகளுக்கு அழகான தமிழ் பெயர்களை சூட்டுங்கள் என்று சொல்லத் தவறுவதில்லை.
ஒரு திருமண விழாவில் ஒரு சகோதரி உங்கள் பெயர் மட்டும் தமிழ் பெயரா? என்று கேட்டார். அதே போல் திண்டுக்கல்லில் இளைஞர் அணி சார்பில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் ஒரு மாணவி உங்கள் பெயர் ஸ்டாலின் என்று இருக்கிறதே இது தமிழ் பெயரா? என்று கேட்டார்.
முதல்வர் கலைஞர் எல்லோருக்கும் தமிழ் பெயர்தான் சூட்டுவார். என் மூத்த அண்ணன் மு.க.முத்துவேலர், அடுத்த அண்ணன் மு.க.அழகிரி, அதேபோல் வீட்டின் பேரன் பேத்திகள் பெயரும் தமிழில்தான் சூட்டப்பட்டுள்ளது. எனக்கும் பெரியார் பெயரையும், அண்ணா பெயரையும் இணைத்து 'அய்யாதுரை' என்றுதான் பெயர் சூட்ட முடிவு செய்தனர்.
அப்போது ரஷ்ய கம்யூனிஸ்ட் தலைவர் ஸ்டாலின் மரணம் அடைந்தார். கம்யூனிசத்தின் மீது கொண்ட பற்று காரணமாக தலைவர் கலைஞர் எனக்கு ஸ்டாலின் என்று பெயர் சூட்டியிருக்கிறார் என்றார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications