கோவை சிறைக்குள் கஞ்சா கடத்தல் - வார்டன் கைது
கோவை: கோவை சிறைக்குள் கஞ்சா கடத்திய வார்டனை போலீசார் கைது செய்தனர்.
சமீபத்தில் சென்னை புழல் சிறைக்குள் கஞ்சா கொண்டு செல்ல முயன்ற தலைமை வார்டன் பிடிபட்டு கைதானார். பின்னர் அவர் டிஸ்மிஸ் செய்யப்பட்டார்.
இந்த நிலையில், கோவை சிறைக்குள் கஞ்சா கடத்திச் செல்ல முயன்று வார்டன் ஒருவர் சிக்கியுள்ளார்.
கோவை மத்திய சிறையில் டிஐஜி கோவிந்தராஜ் உத்தரவின் பேரில் ஜெயிலர் அன்பழகன் தலைமையில் சிறைக்காவலர்கள் நேற்று மாலை சோதனை நடத்தினர்.
அப்போது 7-வது பிளாக் அருகே ஒரு செருப்பு கிடந்தது. அதில் 250 கிராம் கஞ்சா மறைத்து வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
கஞ்சாவுடன் செருப்பு எப்படி சிறைக்குள் வந்தது என்று விசாரித்தபோது, வார்டன் பழனியாண்டி (52) மீது அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது. அவரது அறையில் சோதனை நடத்தினர். அங்கிருந்த மற்றொரு செருப்பிலும் 250 கிராம் கஞ்சா மறைத்து வைக்கப்பட்டு இருந்தது. இதையடுத்து பழனியாண்டி ரேஸ்கோர்ஸ் போலீசில் ஒப்படைக்கப்பட்டார்.
ஜெயிலர் அன்பழகன் கொடுத்த புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் வழக்கு பதிந்து, வார்டன் பழனியாண்டியை இன்று கைது செய்தார்.
திருச்சியைச் சேர்ந்த பழனியாண்டி, கோவை மாவட்டம் காரமடையில் வசித்துவந்தார். ஆயுள் தண்டனை கைதிகள் சசி, பழனிச்சாமிக்காக செருப்பில் மறைத்து கஞ்சா கடத்தியது தெரியவந்தது. சசி, பழனிச்சாமி ஆகியோர் மீதும் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட பழனியாண்டியை சஸ்பெண்ட் செய்து டிஐஜி கோவிந்தராஜ் உத்தரவிட்டார்.
-
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர்












Click it and Unblock the Notifications