கணவர் மரணம்-மனைவி தீக்குளித்து தற்கொலை
திருச்சி: திருச்சி மாவட்டம், தா.பேட்டை அருகே கணவர் இறந்த துக்கம் தாளாமல் அவரது மனைவி தீ குளித்துத் தற்கொலை செய்து கொண்டார்.
திருச்சி மாவட்டம், தா.பேட்டை அருகில் உள்ளது பெருகனூர். இந்த ஊரைச் சேர்ந்தவர் பழனியாண்டி மகன் கார்த்திக் (27). லாரி ஓட்டுனர். இவருக்கும், அதே ஊரைச் சேர்ந்த மேகலாவுக்கும் (23) கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.இவர்களுக்கு ஒரு வயதில் பெண் குழந்தை உள்ளது.
இந்த நிலையில், கேரளத்துக்கு சரக்கு ஏற்றிச் சென்ற கார்த்திக், கடந்த திங்கள்கிழமை அன்று லாரியில் மின் கம்பி உரசியதில் மின்சாரம் பாய்ந்து அங்கேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இதனையடுத்து, உயிரிழந்த கார்த்திக் உடல் பெருகனூருக்குக் கொண்டு வரப்பட்டு, அடக்கம் செய்யப்பட்டது. கணவர் இறந்த துக்கம் தாளாமல் மனமுடைந்த நிலையில் இருந்த அவரது மனைவி
மேகலா, செவ்வாய்க்கிழமை இரவு தனது உடலில் கிரேசினை ஊற்றி தீக்குளித்தார்.
இதை அறிந்த அவரது உறவினர் துரைசாமி மேகலாவைக் காப்பாற்ற முயன்றார். அப்போது அவரும் பலத்த தீக்காயத்தில்சிக்கினார்.
அவர்கள் இருவரும், நாமக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். அங்கு, சிகிச்சைபலனின்றி மேகலா உயிரிழந்தார்.
இந்த சம்பவம் குறித்து தா.பேட்டை போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
-
நாளை மறுநாள் திருச்சி செல்லும் விஜய்.. முதல்வரான பிறகு பொதுவெளியில் முதல் நிகழ்ச்சி! பிளான் என்ன? -
தமிழ்நாட்டில் பெண்கள், ஆண்களில் மதுப்பழக்கம் உள்ளவர்கள் எத்தனை சதவீதம்? மத்திய அரசு வெளியிட்ட டேட்டா -
ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்! நாகை, தஞ்சை, திருச்சிக்கு புதிய ஆட்சியர்கள் நியமனம்! -
முதியவர்கள் அதிகம் வாழும் மாநிலமாக மாறுகிறதா தமிழ்நாடு..? இதென்னப்பா புது பிரச்சனை? -
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications