இரண்டாவது காலாண்டில் ரூ.57.55 கோடி லாபம் ஈட்டிய பயோகான்
பெங்களூர்: பயோடெக்னாலஜி நிறுவனமான பயோகான் இந்த காலாண்டில் ரூ.57.55 கோடியை லாபமாக ஈட்டியுள்ளது. கடந்த ஆண்டில் இதன் நிகர லாபம் ரூ.15.02 கோடிதான் என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த ஆண்டு இதே காலாண்டில் இந்த நிறுவனத்தின் விற்பனை அளவு ரூ.276.53 கோடியாக இருந்தது. ஆனால் அது கிட்டத்தட்ட இருமடங்காகியுள்ளது இந்த ஆண்டு. அதாவது ஜூன் 30-ம் தேதியுடன் முடிந்த காலாண்டில் 505.29 கோடிக்கு விற்பனையாகியுள்ளது.
இந்த நிறுவனத்தின் சின்ஜென் மற்றும் கிளிஜென் ஆகியவற்றிலும் இதே வளர்ச்சி தொடர்கிறது.
'இந்த வளர்ச்சிப் போக்கு அடுத்த நிதியாண்டின் முதல் காலாண்டிலும் தொடரும்' பயோகான் நிறுவனத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் கிரண் மஜூம்தார் தெரிவித்துள்ளார்.
மைலான் நிறுவனத்துடன் சமீபத்தில் கையெழுத்தான உடன்பாடு, இந்தத் துறையில் பாயோகானை முன்னோடி நிறுவனமாக மாற்றியுள்ளதாக மஜூம்தார் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications