பேராசிரியர் சபர்வால் படுகொலை - சாட்சி கத்தியால் குத்திக் கொலை

உஜ்ஜைன் நகரில் உள்ள மாதவ் கல்லூரியில் பணியாற்றி வந்தவர் சபர்வால். இவர் கடந்த 2006ம் ஆண்டு பாஜகவுடன் தொடர்புடைய அகில பாரதி வித்யார்த்தி பரிஷத் மாணவர்களால், படுகொலை செய்யப்பட்டார்.
கல்லூரி வளாகத்திலேயே நடந்த இந்த படுகொலை நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
அதை விட பரபரப்பாக இந்த கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 6 பேரும் நிரபராதிகள் என்று கூறி சமீபத்தில் நாக்பூர் கோர்ட் விடுதலை செய்து விட்டது.
இந்த நிலையில், டெல்லி பல்கலைக்கழகத்தில், ஜூலை 22ம் தேதி இரவு, சபர்வால் கொலைக்குக் கண்டனம் தெரிவித்து மெழுகுவர்த்தி ஏந்திப் போராட்டம் நடத்த சபர்வாலின் மகன் ஹிமன்சு சபர்வால் அழைப்பு விடுத்திருந்தார்.
இதற்காக அவரும், அவரது கணக்காளரான பர்மீந்தர் சிங்கும் பல்கலைக்கழக வளாகத்தில் போஸ்டர்களை ஒட்டிக் கொண்டிருந்தனர்.
இந்த நிலையில் பர்மீந்தர் சிங் இன்று காலை படுகொலை செய்யப்பட்டார். கத்தியால் குத்தி அவரைக் கொன்றுள்ளனர்.
தனது தந்தையைக் கொன்ற கும்பல்தான் பர்மீந்தரையும் கொன்று விட்டதாக ஹிமன்சு கூறியுள்ளார்.
இருப்பினும் பர்மீந்தருடன் கடைசியாக இருந்தவர் ஹிமன்சு என்பதால் போலீஸார் அவரைக் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
சபர்வால் கொலை வழக்கில் பர்மீந்தர் சிங்கும் ஒரு சாட்சி என்பது குறிப்பிடத்தக்கது.
-
கடலூரில் முகம் சிதைத்த நிலையில் கிடந்த இளம்பெண் சடலம்.. கொலையாளி யார்? போலீஸ் தீவிரம் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ












Click it and Unblock the Notifications