ஒரிஸ்ஸா மடத்தின் ரூ.6 கோடி நிலம் சுருட்டல்!
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் அருகே மணிமங்கலத்தில் உள்ள ஒரு மடத்துக்குச் சொந்தமான ரூ.6 கோடி மதிப்புள்ள 5 ஏக்கர் நிலத்தை மோசடியாக விற்ற மடத்தின் மேலாளர் மற்றும் பெண் கைது செய்யப்பட்டனர்.
ஒரிஸ்ஸா மாநிலத்தைச் சேர்ந்தவர் மகந்த் பசந்த் தாஸ் பாவாஜி (87) காஞ்சிபுரம் நெல்லுக்காரத் தெருவில் உள்ள உதாசீன் பாவாஜி மடத்தின் தலைவராக உள்ளார்.
இவருக்கு ஒரியா, இந்தி மொழிகள் மட்டுமே பேசவும் எழுதவும் தெரியும். மற்ற மொழிகள் தெரியாது.
இந்த மடத்துக்கு காஞ்சிபுரம், மணிமங்கலம், ராணிப்பேட்டை, ஸ்ரீரங்கம், திருவண்ணாமலை, ராமேஸ்வரம், திருப்பதி ஆகிய இடங்களில் பல கோடி மதிப்புள்ள சொத்துகள் உள்ளன.
செல்வராஜ் (50) என்பவர் கடந்த 2000ம் ஆண்டு முதல் மடத்தின் மேலாளராக பணியாற்றி வருகிறார். மடத்தின் சொத்துகளை சுருட்ட திட்டமிட்ட இவர், முதலில் பாவாஜியிடம் சொத்துகள் தொடர்பாக, ஏமாற்றி 'பவர் ஆப் அட்டர்னி' வாங்கிக் கொண்டுள்ளார்.
இதில் மணிமங்கலத்தில் உள்ள 5 ஏக்கர் நிலத்தை சென்னை ஆலப்பாக்கத்தைச் சேர்ந்த ஜான்சிராணிக்கு (48) மாற்றித் தந்தார் செல்வராஜ்.
ஜான்சிராணி அந்த நிலத்தை வேறு சிலருக்கு விற்றுவிட்டார். இந்த மோசடி குறித்து அறிந்த மடத்தின் சில பக்தர்கள் வழக்கறிஞர் மூலம் மாவட்டக் குற்றப்பிரிவு போலீஸில் புகார் செய்தனர்.
போலீசார் வழக்குப் பதிவு செய்து செல்வராஜ்), ஜான்சிராணியை கைத செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications