யுஎஸ்-சிறுமிக்கு செக்ஸ் வலை வீசிய இந்தியர் கைது
நியூயார்க்: இன்டர்நெட் மூலம் சிறுமிகளுக்கு செக்ஸ் வலைவீசியதாக இந்தியாவைச் சேர்ந்த சாப்ட்வேர் என்ஜினியர் அமெரிக்காவில் கைது செய்யப்பட்டுள்ளார்.
பென்சில்வேனியாவில் பணியாற்றி வரும் நித்யானந்த் கோபாலிகா (30) என்ற ஆந்திர வாலிபர் இன்டர்நெட்டில் பல்வேறு சேட் ரூம்களில் சென்று சிறுமிகளுக்கு வலை வீசியுள்ளார்.
வழக்கமாக சேட் ரூம்களை கண்காணிக்கும் அமெரிக்க உளவுப் பிரிவினர் இது குறித்து பென்சில்வேனியா போலீசாருக்கு தகவல் தரவே அவருடன் Child Predator Unit என்ற சிறார் பாலியல் வதை தடுப்புப் பிரிவைச் சேர்ந்த ஒரு போலீஸ்காரர் தன்னை பிட்ஸ்பர்க்கைச் சேர்ந்த சிறுமி என்று அறிமுகப்படுத்திக் கொண்டு சேட் செய்ய ஆரம்பித்தார். இந்த உரையாடல் பல நாட்கள் நீடித்தது.
அப்போது அந்த 'சிறுமியிடம்' செக்ஸ் அனுபவங்கள் குறித்தெல்லாம் விலாவாரியாகப் பேசிய நித்யானந்த், அவரை சந்திக்க விரும்புவதாகவும் உறவு வைத்துக் கொள்ளவும் அழைத்துள்ளார்.
மேலும் வெப் கேமராவுக்கு முன் நிர்வாணமாக நின்றபடி சில கேவலமான செயல்களைச் செய்து அதை லைவ் ஆகவும் அந்த 'சிறுமிக்கு' ஒளிபரப்பினார் நித்யானந்த்.
இதையடுத்து அவரை ஒரு இடத்துக்கு வரச் சொன்னார் 'சிறுமி'. அதை நம்பி அங்கு சென்ற நித்யானந்தை போலீசார் கைது செய்தனர்.
அவரது காரிலிருந்து டிஜிட்டல் கேமரா, லேப்டாப், செல்போன், காண்டம்களும் கைப்பற்றப்பட்டன. இப்போது பட்லர் கவுண்டி சிறையில் அடைக்கப்பட்டுள்ள நித்யானந்த் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்துள்ளார்.
இவர் மீதான சிறால் பாலியல் கொடுமைப் பிரிவு வழக்கு நிரூபி்க்கப்பட்டால் 20 ஆண்டுகள் வரை சிறையில் தள்ள முடியும்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்!












Click it and Unblock the Notifications