அமைச்சரவை கூட்டம்-பிரதமருக்கு மம்தா தந்த அதிர்ச்சி

நேற்று முன் தினம் இந்தச் சம்பவம் நடந்துள்ளது. நிலங்களை கையப்படுத்தும் சட்டத்தில் திருத்தம் செய்வது தொடர்பாக அமைச்சரவைக் கூட்டத்தில் ஒரு அறிக்கையை பிரதமர் முன் வைத்தார்.
அதில், பொருளாதார மண்டலங்கள் அமைக்கும் தனியார் நிறுவனங்கள் 70 சதவீத நிலத்தை நேரடியாக விவசாயிகளிடமிருந்து வாங்கிக் கொள்ளலாம், மிச்சமுள்ள 30 சதவீதத்தை மாநில அரசுகள் கையப்படுத்தித் தரும் என்று கூறப்பட்டிருந்தது.
அதைப் பார்த்தவுடன் டென்சனான மம்தா பானர்ஜி, எப்படி இப்படி ஒரு சட்டத் திருத்தத்தைக் கொண்டு வரலாம். இது குறித்து ஏன் என்னிடம் முதலிலேயே விவாதிக்கவில்லை. இந்த சட்டத் திருத்தத்துக்கு நான் ஆதரவு தர முடியாது.
இதைத் தானே மேற்குவங்க மாநிலம் நந்திகிராமல் இடதுசாரி அரசு செய்ய முயன்றது. அதை எதிர்த்துத் தானே நான் பெரும் போராட்டம் நடத்தினேன்.
ஆனால் அதே தவறை செய்யும் நீங்கள் உங்கள் தவறுக்கெல்லாம் என்னையும் ஒரு அங்கமாக்க முயல்கிறீர்களா?. இந்தத் தவறைச் செய்ய நான் தயாராக இல்லை என்று கத்திவிட்டு வெளியேறினார்.
இதைப் பார்த்து பிரதமர், அமைச்சர்கள் அதிர்ந்து போய் அமர்ந்திருக்க பின்னாடியே ஓடியுள்ளார் பிரணாப் முகர்ஜி. இந்த சட்டத் திருத்தம் குறித்து இன்று பேசமாட்டோம் என்று உறுதியளித்துவிட்டு கெஞ்சிக் கூத்தாடினார்.
இதையடுத்தே மம்தா பானர்ஜி அமைச்சரவைக் கூட்டத்துக்குத் திரும்பி வந்துள்ளார். இதனால் 45 நிமிடங்கள் அமைச்சரவைக் கூட்டம் ஸ்தம்பித்துப் போனது.
மம்தாவின் எதி்ர்பபையடுத்து இந்த திருத்தம் குறித்து நிலைக் குழு ஆராயும் என்று அறிவித்த பிரதமர் மன்மோகன் சி்ங் அந்த சட்டத் திருத்த பைலைத் தூக்கி ஓரமாக வைத்துவிட்டார்.
ஆனாலும் கோபம் தணியாத மம்தா நேற்று மக்களவைக் கூட்டத்தை புறக்கணித்துவிட்டார்.
மம்தாவி்ன் இந்தச் செயல் பிரதமருக்கு, இடதுசாரிகளை நினைவூட்டியிருக்கும் என்பது மட்டும் நிச்சயம்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications