சென்னையில் உச்ச நீதிமன்றக் கிளை-கருணாநிதி கோரிக்கை

Subscribe to Oneindia Tamil

Karunanidhi
சென்னை: தென் மாநில மக்கள் பயன்பெறும் வகையில் சென்னையில் உச்ச நீதிமன்றக் கிளையைத் துவக்க வேண்டும் என்று முதல்வர் கருணாநிதி கோரிக்கை விடுத்தார்.

சென்னையில் நீதியியல் மையத்தில் கட்டப்பட்டுள்ள புதிய விருந்தினர் மாளிகையை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணன் திறந்து வைத்தார்.

இந் நிகழ்ச்சியில் முதல்வர் கருணாநிதி பேசுகையில்,

சென்னையில் நிகழ்ச்சியொன்றில் பேசிய அவர், தமிழக அரசு நீதித்துறைக்காக ரூ. 300 கோடி ஒதுக்கியுள்ளது. தென் மாநிலங்களைச் சேர்ந்த சாமானிய மக்கள் பயன்பெறும் வகையில் உச்ச நீதிமன்றத்தின் கிளையை சென்னையில் அமைக்க வேண்டும் என்று நீண்ட நாட்களாகக் கோரி வருகிறோம். இந்தக் கோரிக்கையை நான் மீண்டும் வலியுறுத்துகிறேன்.

சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழ‌ை வழக்கு மொழியாக்க வேண்டும் என்று கோரி சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றியுள்ளோம். இந்தக் கோரிக்கை ஏற்கப்பட்டு தமிழ் வழக்காடு மொழியாக அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கிறோம் என்றார்.

70 சிபிஐ நீதிமன்றங்களுக்கு அனுமதி..

நிகழ்ச்சியில் பேசிய தலைமை நீதிபதி கே.ஜி. பாலகிருஷ்ணன்,

வழக்கறிஞர்கள் அடிக்கடி தேவையில்லாத போராட்டங்களில் ஈடுபடக் கூடாது. மிக அவசியம் இருந்தால் தவிர போட்டங்களை நடத்தக் கூடாது. இந்தப் போராட்டங்களால் வழக்குகள் மேலும் தேங்குவது மிகுந்த வருத்தம் அளிக்கும் விஷயமாகும்.

நாடு முழுவதும் 70 சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றங்களை அமைக்கவும், 200 குடும்ப நல நீதிமன்றங்களை அமைக்கவும் பிரதமர் ஒப்புதல் அளித்துள்ளார் என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+