அமெரிக்காவின் அலங்கோலம் - 7 மாதத்தில் 64 வங்கிகள் மூடல்
Subscribe to Oneindia Tamil
நியூயார்க்: அமெரிக்காவில் கடந்த 7 மாதங்களில் 64 வங்கிள் மூடப்பட்டுள்ளன. பொருளாதார சீர்குலைவே இதற்குக் காரணம்.
இந்த ஆண்டு சராசரியாக மாதத்திற்கு 9 வங்கிகள் மூடு விழா கண்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
அமெரிக்காவின் நிதி நிலைமை மோசமடைந்து வருவதையே இது காட்டுகிறது. கடந்த ஆண்டு நிதிச் சிக்கல் காரணமாக வெறும் 28 வங்கிகளே மூடப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த வாரத்தில் மட்டும் 7 வங்கிகள் திவால் ஆகியுள்ளன. இதில் ஆறு வங்கிகள் ஜார்ஜியாவின் செக்யூரிட்டி பேங்க் கார்ப்பரேஷனின் துணை வங்கிகள் என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த மார்ச் 31ம் தேதி கணக்குப்படி இந்த ஆறு வங்கிகளின் மொத்த சொத்து மதிப்பு 2.8 பில்லியன் டாலராக இருந்தது. முதலீடுகள் 2.4 பி்ல்லியன் டாலராக இருந்தது.












Click it and Unblock the Notifications