மும்பை இரட்டை குண்டுவெடிப்பு-மூவர் குற்றவாளிகள் என தீர்ப்பு
மும்பை: மும்பையில் கடந்த 2003ம் ஆண்டு நடந்த இரட்டைக் குண்டுவெடிப்பு 3 பேர் குற்றவாளிகள் என அறிவிக்கப்பட்டுள்ளனர்.
2003ம் ஆண்டு ஆகஸ்ட் 25ம் தேதி மும்பையில் உள்ள கேட்வே ஆப் இந்தியா மற்றும் ஜாவ்ரி பஜார் பகுதிகளில் இரட்டைக் குண்டுவெடிப்புகள் நடந்தன.
இதில், கேட்வே இந்தியா பகுதியில் 50 பேரும், ஜாவ்ரி பஜார் பகுதியில் 3 பேரும் உயிரிழந்தனர்.
இந்த குண்டுவெடிப்புக்கு லஷ்கர் இ தொய்பா அமைப்பே காரணம் என தெரிய வந்தது. டாக்சிகளில் குண்டுகளை வைத்து அவற்றை வெடிக்கச் செய்தனர் தீவிரவாதிகள்.
இந்த சம்பவம் தொடர்பாக முகம்மது ஹனீப் சயீத், அவரது மனைவி பஹீமிதா, அஷ்ரத் சபீக் அன்சாரி, ஜாகித் யூசுப் பத்னி, ரிஸ்வான் லட்டூவாலா, ஷேக் பேட்டரிவாலா ஆகிய 6 பேரை போலீஸார் கைது செய்தனர்.
இந்த கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த முக்கிய நபரான நசீர் என்பவர் 2003ம் ஆண்டு செப்டம்பர் மாதம் மாதுங்கா பகுதியில் நடந்த என்கவுன்டரில் சுட்டுக் கொல்லப்பட்டார்.
கைதான 6 பேர் மீதும் பொடா சட்டத்தின் கீழ் நான்கு வழக்குகள் போடப்பட்டன. மொத்தம் 101 சாட்சிகள் இதில் விசாரிக்கப்பட்டனர். கடந்த ஆறு வருடமாக நடந்து வந்த விசாரணை முடிவடைந்து இன்று தீர்ப்பு அளிக்கப்பட்டது.
குற்றம் சாட்டப்பட்ட 6 பேரில் 3 பேர் பொடா சட்டத்தின் கீழ் குற்றவாளிகள் என தீர்ப்பளிக்கப்பட்டது.
முகம்மது ஹனீப் சயீத், மனைவி பஹீமிதா, அஷ்ரத் சபியூக் அன்சாரி ஆகியோரே குற்றவாளிகள் என அறிவிக்கப்பட்டவர்கள் ஆவர்.
இவர்கள் மீது பொடா மற்றும் இந்திய குற்றவியல் சட்டத்தின் பல்வேறு பிரிவுகளின் கீழ் குற்றம் சாட்டப்பட்டிருந்தது.
இவர்களுக்கான தண்டனை விவரம் ஆகஸ்ட் 4ம் தேதி அறிவிக்கப்படும் என நீதிபதிகள் அறிவித்தனர்.
-
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்!












Click it and Unblock the Notifications